NATIONAL

சிலாங்கூர் எஃப்சிக்கு வழங்கிய தண்டனை மனிதாபிமானமற்றது –  சிலாங்கூர் சுல்தான்

ஷா ஆலம், ஜூன் 27: சிலாங்கூர் எஃப்சியை அதிகமாகத் தண்டித்ததற்காக மலேசிய கால்பந்து லீக் மீது சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கோபமடைந்துள்ளார்.

அவர் அச்செயலை அபத்தமானது என்று வர்ணித்தார். அதுமட்டுமில்லாமல், வழங்கப்பட்ட தண்டனை மரியாதை இல்லாமல், பொறுப்பற்ற தன்மை மற்றும் மனிதாபிமானமற்ற செயலாகும் என குறிப்பிட்டார்.

“ஹோஸ்ட் மற்றும் மலேசிய கால்பந்து லீக்குக்கு ஏற்பட்ட இழப்புக்கு சிலாங்கூர் எஃப்ஏ க்கு 100,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. போட்டி எதிர் அணிக்கு சாதகமாக முடிவுற்ற போதும், மூன்று புள்ளிகளைக் குறைத்தல் மற்றும் பார்வையாளர்கள் இல்லாதப் போட்டி, அபராதம் விதித்தல் ஆகியவை அபத்தமானது மற்றும் அதிகப்படியான தண்டனையாகும்,” என்றார்.

மேலும், சிலாங்கூர் எஃப்சி வீரர் பைசல் ஹலிம் மீது ஆசிட் ஊற்றப்பட்ட சம்பவத்தையும், அதே வாரத்தில் பல கால்பந்து வீரர்கள் தாக்கப் பட்டதையும் நினைவுபடுத்தினார்,

எனவே, வீரர்களின் அதிர்ச்சி மற்றும் பயம் காரணமாகப் சும்பங்சிஹ் போட்டியை ஒத்திவைக்க  சிலாங்கூர் சுல்தான் சம்மதத்துடன் வேண்டுகோள் விடுக்கப்பட்டது, ஆனால், மலேசிய கால்பந்து லீக் அதனை மறுத்து எதிர் அணி வெற்றி பெற்றதாக அறிவித்தது.

“மேலும், மலேசிய கால்பந்து லீக் மற்றும் மலேசிய கால்பந்து சங்கம் வீரர்களுக்கு நடந்த வன்முறை மற்றும் கொடுமையின் அம்சம் குறித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை,” என்று சுல்தான் கூறினார்.

மலேசிய கால்பந்து லீக் மற்றும் மலேசிய கால்பந்து சங்கம் ஆகியவை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அனுதாபத்தையும் இரக்கத்தையும் காட்டவில்லை. இதன் விளைவாக தேசிய கால்பந்தின் நம்பகத்தன்மைக்குக் களங்கம் ஏற்படும்.“மலேசிய கால்பந்து லீக்கின் இந்த நடவடிக்கை கால்பந்து துறையின் நற்பெயரை களங்கப்படுத்துகிறது” என்று மேலும் அவர் கூறினார்.


Pengarang :