NATIONAL

கிள்ளான் பள்ளத்தாக்கில்  வளர்ச்சி  மையமாக விளங்கும் பூச்சோங் விரைவில் அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும்

சுபாங் ஜெயா, ஜூன் 27:  கிள்ளான் பள்ளத்தாக்கு (லெம்பா கிள்ளான் ராயா) வளர்ச்சியின் மையமாக விளங்கும் பூச்சோங்கின்  மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டிருப்பதன் மூலம் வேகமாக மேம்பாடு அடையும்.

மேலும், வளர்ச்சியும் நிலைத் தன்மையுடன் கைகோர்த்துச் செல்கிறது, அதாவது சுற்றுச்சூழல் அழகு உட்பட, நல்வாழ்வு மற்றும் வாழ்க்கைக்கான சமநிலைக்கு உத்தரவாதம் அளிக்கிறது என முதலீட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் இங் சீ ஹான் கூறினார்.

“லெம்பா கிள்ளான் ராயாவில்  வளர்ச்சியில்  முக்கிய மையமாகப் பூச்சோங் இருக்கும். அதை தொடர்ந்து மேம்படுத்துவதற்கும்  அங்குள்ள மக்களுக்கு  அடிப்படை வசதிகளை தொடர்ந்து மேம்படுத்துவது ஒரு சவாலாக உள்ளது.

மேலும், 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட, மக்கள் நலனுக்காக பல மாற்றங்களைச் செய்துள்ளோம்.  போக்குவரத்து வலையமைப்பை மேம்படுத்தி வருகிறோம், எதிர்காலத்தில் மேலும் பல வசதிகளை கொண்டு வருவோம், என்றார்.

பூச்சோங்கில் குடியிருப்பாளர்கள் ஆரோக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதை எளிதாக்கும் வகையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு வளாகமும் இருக்கும் என்றார்.

“இந்த வளாகம் பாதுகாப்பான ஃபுட்சல், கூடைப்பந்து மற்றும் (ஜேகிங்)  நடைபயிற்சி டிராக்குடன் முழுமையாக அமைந்திருக்கும். இந்த வசதிகள் அனைத்தும் இளம் தலைமுறையினர்,  இங்கு ஒரு குடும்பத்தை உருவாக்க  உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் RM2 மில்லியன் ஒதுக்கீட்டில் லெம்பா கிள்ளான் ராயாவில் பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா, ஷா ஆலம் மற்றும் கிள்ளான் ஆகியவை இணைக்கப்படும்.

இது தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய பொருளாதார தளமாக மாறும் திறனைக் கொண்டுள்ளது மற்றும் அதை முழுமையாக கட்டமைத்தால் ஆசியாவின்  ஐந்து முக்கிய  பள்ளத்தாக்குகளில்  ஒன்றாக  உருவாக்க முடியும் என்றார்.

இதற்கிடையில். உள்ளூர் சமூகத்தின் கலை மற்றும் கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்தும் நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது.

“இந்த நிகழ்ச்சி பூச்சோங்கில் உள்ள கலை மற்றும் கலாச்சார வாழ்க்கையை எடுத்துக் காட்டுகிறது மற்றும் பல்வேறு இனங்களை ஒன்றிணைக்கும் ஒரு தளமாகச் செயல்படுகிறது. மேலும், இயற்கையின் அழகைப் பாராட்டவும், பொழுதுபோக்கு மற்றும் கலை நடவடிக்கைகளுக்கு இடையில் சமநிலையைப் பாராட்டவும் குடியிருப்பாளர்களை ஊக்குவிக்கிறது,” என்று அவர் கூறினார்.


Pengarang :