NATIONAL

இரண்டு நெடுஞ்சாலை திட்டங்களில் RM1.6 பில்லியன்  ஊழல் சம்பந்தமாக இயக்குனர் கைது

கோலாலம்பூர், ஜூன் 29: கிள்ளான் பள்ளத்தாக்கில் இரண்டு நெடுஞ்சாலைத் திட்டங்களில் RM1.6 பில்லியனுக்கும் அதிகமான ஊழல் வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட ஒரு  நிர்வாக அமைப்பின் தலைமை உதவி இயக்குனரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்  கைது செய்தது.

நேற்று இரவு 10 மணிக்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தலைமையகத்தில் சாட்சியமளிக்க வந்த 40 வயது மதிக்கத்தக்க அந்நபர், பின்னர் கைது செய்யப் பட்டதாக தெரிவிக்கப் பட்டது.

“சந்தேக நபர் நெடுஞ்சாலையை நிர்மாணிப்பது தொடர்பான பணி ஒப்பந்தத்தை வழங்க ஒரு நிறுவனத்திடமிருந்து RM146,000 (சந்தேக நபரால்) லஞ்சமாக பெற்றதாக நம்பப்படுகிறது,” என தெரிவிக்கப்பட்டது.

நேற்று காலை புத்ராஜெயா நீதிமன்றத்தில் மஜிஸ்ட்ரெட் நசிரா அட்லின் அஹ்மட் கைருல் ராஸி வழங்கிய உத்தரவின் கீழ் சந்தேக நபர் ஜூலை 1 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் விளக்கமறியலில் தடுக்க வைக்கப் பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முன்னதாக ஒரு நெடுஞ்சாலை  நிறுவனத்தின் இரண்டு உயர் தலைமை நிர்வாக அதிகாரிகள் உட்பட ஒன்பது நபர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், கடந்த திங்கட்கிழமை தடுத்து வைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைச் சலுகை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி உட்பட நான்கு சந்தேக நபர்களின் விளக்கமறியல் இன்று முதல் ஜூலை 2 வரை நீட்டிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய விண்ணப்பத்தின் மாஜிஸ்திரேட் நசிரா அட்லின் ஏற்றுக்கொண்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் துணைத் தலைமை ஆணையர் (செயல்பாடுகள்) டத்தோஸ்ரீ அகமட் குசைரி யஹாயாவைத் தொடர்பு கொண்டபோது, மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப் பட்டதையும், நான்கு சந்தேக நபர்களின் தடுப்பு காவலையும் உறுதிசெய்து, ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு 16(ஏ) கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

– பெர்னாமா


Pengarang :