NATIONAL

RS-1 மக்கள் தொகை அதிகரிப்பை சமாளிக்க ஒரு விரிவான வளர்ச்சித் திட்டத்தைக் கொண்டுள்ளது

தாசிக் குளுகோர், ஜூலை 1: இடம் பெயர்வு காரணமாக ஏற்பட்ட மக்கள் தொகை அதிகரிப்பை சமாளிக்க ஒரு விரிவான வளர்ச்சித் திட்டத்தை முதல் சிலாங்கூர் திட்டம் (RS-1) கொண்டுள்ளது என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

சிலாங்கூரின் மக்கள் தொகை இப்போது ஏழு மில்லியன் ஆகும் என்பதை விளக்கிய டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, மாநிலத்தை முறையாக நிர்வகிப்பதற்கான தெளிவான வழிகாட்டுதலுடன் முதல் சிலாங்கூர் திட்டம் வடிவமைப்பு செய்யப் பட்டதாக கூறினார்.

“மேலும், 2008இல், சிலாங்கூர் மக்கள்தொகை 4.8 மில்லியனாக இருந்த நிலையில் 2020இல் 6.8 மில்லியனாகப் பதிவாகியது. தற்போது அதிக இடம்பெயர்வு காரணமாக ஏழு மில்லியனை எட்டியுள்ளது. பிறப்பு விகிதத்தை அளந்தால், 2018 வரை 1.9 மில்லியன் மட்டுமே மக்கள் தொகையாகும்.

“எனவே, அதிக மக்கள் தொகையால் வளர்ச்சி அடைய ஏற்கனவே உள்ள சூத்திரங்கள் மற்றும் கொள்கைகளை மாநில அரசு மீண்டும் செயல்படுத்த முடியாது,” என்று அவர் கூறினார்.

வளர்ச்சி அடைந்த மாநிலத்தின் நிலையை, 2005 ஆம் ஆண்டிலிருந்து தக்கவைத்து கொள்வதற்கான சவாலை எதிர்கொள்ளும் வகையில் முதல் சிலாங்கூர் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மலேசியா அறிவியல் பல்கலைகழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமிருடின் கூறினார்.

“இந்த திட்டத்தை மாநில அரசு 2022இல் தொடங்கியது. இத்திட்டம் ஒவ்வொரு ஆண்டும் சொந்த வளர்ச்சித் திட்டத்தைத் தொடங்கும் முதல் மாநிலமாகச் சிலாங்கூரை மாற்றும்.

“மாநிலத்தின் பொருளாதாரத்தை இயக்க தெற்கு சிலாங்கூர் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பகுதி (IDRISS) மற்றும் சபாக் பெர்ணம் பகுதி மேம்பாடு உட்பட பல RS-1 திட்டங்கள் பலப்படுத்தப்படும்” என்று அவர் கூறினார்.


Pengarang :