NATIONAL

கோலா குபு பாருவின் சுற்றுலாத் திறனை மேம்படுத்த வேண்டும்

ஷா ஆலாம், ஜூலை 10: உலு சிலாங்கூரில் குறிப்பாக சுற்றுச்சூழல்
சுற்றுலா நடவடிக்கைகள் நிறைந்த கோலா குபு பாருவின் சுற்றுலாத்
திறனைப் மேம்படுத்த வேண்டும் என்று அதன் சட்டமன்ற உறுப்பினர்
கூறினார்.

விளையாட்டு மற்றும் பண்ணை நிர்வாகிகள் வழங்கிய தரவுகளின்
அடிப்படையில்,உலு சிலாங்கூர் கடந்த ஆண்டு 336,894
பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இது 2022இல் உடன் ஒப்பிடும்போது
52 சதவீதம் (220,968) அதிகமாகும் என்று பாங் சோக் தாவோ கூறினார்.

உலு சிலாங்கூரில் சுற்றுலா சலுகைகள் மற்றும் இடங்கள் வளர்ந்து
வருகின்றன என்பதை இது நிரூபிப்பதாக அவர் கூறினார். மேலும்
மலேசியர்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமிருந்து வருகை புரியும்
மக்களை அவை ஈர்த்துள்ளன.

சிலாங்கூரில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு கோலா குபு பாரு
மேலும் பங்களிக்க முடியும்.

எனவே, சிலாங்கூர் அரசாங்கம் உலு சிலாங்கூரைக் குறிப்பாக கோலா
குபு பாருவை முதல் சிலாங்கூர் திட்டத்தில் (RS-1) சேர்க்க வேண்டும்
என்று நான் பரிந்துரைக்கிறேன், எனஅவர்   சிலாங்கூர் மாநில
சட்டமன்றத்தில் ” RS-1யை திட்ட” விவாதத்தின் போது கூறினார்.

அதே நேரத்தில், சுற்றுலாத் தலங்களில் பொதுக் கழிப்பறைகள் மற்றும்
பொது வசதிகளின் பராமரிப்பு ஆகியவை அதிகரிக்கப்பட வேண்டும்
என்றார்.

கூடுதலாக, கோலா குபு பாருவில் டிஆர்டி வேன் சேவைகளை
உருவாக்குவதன் மூலம் பொதுப் போக்குவரத்தின் அணுகலை
அதிகரிக்க நான் முன்மொழிகிறேன்,“ என்று அவர் கூறினார்.

கோலா குபு பாருவில் வசிப்பவர்களுக்கு சுற்றுச்சூழல் சுற்றுலாத்
துறையை முக்கிய பொருளாதார ஆதாரமாக மாற்றுவது, மே மாதம்
நடந்த கோலா குபு பாரு இடைத்தேர்தலில் (பிஆர்கே) வெற்றி பெற்ற
அவரின் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.


Pengarang :