NATIONAL

தேசிய சேவை பயிற்சித் திட்டம் (பிஎல்கேஎன்) அடுத்த ஆண்டு மத்தியில் தொடங்கப்படும்

ஷா ஆலம், ஜூலை 11: தேசிய சேவைப் பயிற்சித் திட்டம் (பிஎல்கேஎன்) 3.0 புதிய வடிவமைப்புடன் அடுத்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலையில் தொடங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நான்காம் படிவ மாணவர்களுக்குப் பள்ளி அளவில் ப்ரீ-பிஎல்கேஎன் அறிமுகப்படுத்தப்படும். 17 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இளைஞர்களுக்குப் பிறகு அடிப்படை பிஎல்கேஎன் மேம்பட்ட பயிற்சிக் கட்டத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டின் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், அடுத்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலையில் கல்வி அமைச்சினால் தொடங்கும் ஜென்மடாணி இணை பாடத்திட்ட நடவடிக்கைகளின் போது ப்ரீ-பிஎல்கேஎன் செயல்படுத்தப் படும் என்றார்.

நாடு முழுவதும் உள்ள 13 பிராந்திய இராணுவ முகாம்கள், 20 பொது பல்கலைக்கழகங்கள் மற்றும் பல பாலிடெக்னிக்குகளில் அடிப்படை பயிற்சியை மேற்கொள்ள 17 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

“1,000 பங்கேற்பாளர்கள் இலக்குடன் இரண்டு பிராந்திய முகாம்களை உள்ளடக்கிய அடிப்படை பிஎல்கேஎன் கட்ட முன்னோடித் திட்டம் ஜூன் அல்லது ஜூலை 2025இல் தொடங்கும்.

பிஎல்கேஎன் மறு-அமுலாக்கத்தின் சமீபத்திய நிலையை அறிய விரும்பிய ஜெலி நாடாளுமன்ற உறுப்பினர் ஜஹாரி கெச்சிக்கின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

மேலும், கருத்துத் தெரிவித்த முகமட் காலிட், இத்திட்டத்தில் 30 சதவீதம் அடிப்படைக் குடியுரிமைத் தொகுதிகளும், 70 சதவீதம் அடிப்படை இராணுவப் பயிற்சியும் கொண்டிருக்கும் என்றார்.


Pengarang :