NATIONAL

வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்ட வேலையின் மூலம் RM105,650 இழப்பு

ஜோகூர் பாரு, ஜூலை 17: கடந்த புதன்கிழமை வாட்ஸ்அப் செயலி வழி வழங்கப்பட்ட போலி இணைய வேலையின் மூலம் பெண் ஒருவர் RM105,650 இழந்தார்.

பாதிக்கப்பட்ட 41 வயது பெண், ‘லக்ஸ் லெகசி’ மூலம் இணைய வேலை வாய்ப்புகளை வழங்கும் இணைப்பைப் பெற்றுள்ளார். மேலும், நிறைவு செய்யப்படும் ஒவ்வொரு பணிக்கும் கமிஷன் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது என வடக்கு ஜோகூர் பாரு மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் மகிண்டர் சிங் கூறினார்.

முதலீடு செய்யப்பட்ட மூலதனத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை வருமானம் ஈட்ட முடியும் என உறுதியளிக்கப்பட்ட தாகப் பல்வீர் கூறினார்.

“கமிஷன் மற்றும் எளிதான பணிகளால் ஈர்க்கப்பட்ட பாதிக்கப்பட்டவர், கடந்த வியாழன் முதல் சனிக்கிழமை வரை RM105,650 த்தை ஐந்து வெவ்வேறு கணக்குகளுக்கு 10 பரிவர்த்தனைகள் மூலம் அனுப்பியுள்ளார்.

“பின் பாதிக்கப்பட்டவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து நேற்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார்,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டப் பிரிவு 420ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :