NATIONAL

கே.எல்.ஐ.ஏ. ஏரோட்ரேன் சேவை 2025 மார்ச் மாதம் தொடங்கும்

கோலாலம்பூர், ஜூலை 17- கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் ஏரோட்ரேன் சேவை வரும் 2025ஆம் ஆண்டு முதல் காலாண்டில் தொடங்கும் என்று போக்குவரத்து அமைச்சு கூறியது.

கே.எல்.ஐ.ஏ. முதலாம் முனையத்தில் உள்ள ஏரோட்ரேன்களை மாற்றும் பணி வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி முற்றுப்பெற திட்டமிட்டுள்ளதற்கு ஏற்ப இது அமைந்துள்ளது என்று அது தெரிவித்தது.

ஏரோட்ரேன்களை மாற்றும் பணி  நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முற்றுப் பெறுவதை உறுதி செய்யும் கடப்பாட்டை போக்குவரத்து அமைச்சும் மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் நிறுவனமும் கொண்டுள்ளன என்று நாடாளுன்ற அகப்பக்கத்தில் வெளியிட்ட பதிலில் அமைச்சு குறிப்பிட்டது.

கே.எல்.ஐ.ஏ. ஏரோட்ரேன் தொடர்பான புதிய ஒப்பந்தம் மற்றும் அதற்கான செலவினம் உள்ளிட்ட அந்த சேவையின் நடப்பு நிலவரம் தொடர்பில் மெர்போக் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் முகமது நஸ்ரி அபு ஹசான் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில் அமைச்சு இவ்வாறு கூறியது.

அடுத்தாண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் இத்திட்டத்தை முடிப்பது தொடர்பில் ஏல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் சிஸ்டம் சென். பெர்ஹாட் மற்றும் ஐ.ஜே.எம். கண்ஸ்ட்ராக்சன் சென்.பெர்ஹாட்-பெஸ்டெக் டெக்னோலோஜி சென். பெர்ஹாட் ஆகிய நிறுவனங்களுடன் போக்குவரத்து அமைச்சும் எம்.ஏ.எச்.பி.யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.


Pengarang :