SELANGOR

சூப்பர் லீக்: சிலாங்கூர் 4-1 என்ற கோல் கணக்கில் பினாங்கை வீழ்த்தி இரண்டாவது இடத்தைப் பிடித்தது

கோலாலம்பூர், ஜூலை 27: பெட்டாலிங் ஜெயா சிட்டி கவுன்சில் ஸ்டேடியத்தில் (எம்பிபிஜே) இன்று இரவு நடந்த ஆட்டத்தில் பினாங்கு எப்சியை 4-1 என்ற கோல் கணக்கில் சிலாங்கூர்  வீழ்த்தியது.

இவ்வெற்றியின் மூலம் சிலாங்கூர் எஃப்சி சூப்பர் லீக்கில் மூன்று புள்ளிகளைச் சேகரித்து இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

லீக் பட்டியலில் பின்னால் அதிக நேரம் இடம் பிடிக்க  விரும்பாத சிலாங்கூர், எடுத்த எடுப்பிலேயே ஆட்டத்தை கடுமையாக்கியது,  அதன் பயனாக  மூன்றாவது நிமிடத்தில் நடுத்  திடல் ஆட்டக்காரர் முகைரி அஜ்மல் மஹதியின் கோலின் மூலம்  முன்னேற தொடங்கியது.

இருப்பினும், 63வது நிமிடத்தில் பெனால்டியை பிரேசிலின் இறக்குமதி வீரர் ரஃபேல் விட்டர் கோலாக மாற்றியதை அடுத்து, பினாங்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது.

எவ்வாறாயினும், 70 வது நிமிடத்தில் பெனால்டி மூலம் யோஹான்ட்ரி ஓரோஸ்கோ மீண்டும் சிலாங்கூரை முன்னிலைப் படுத்தினார்.

பயிற்சியாளர் நிட்ஸாம் ஜமிலின் அணியை மீண்டும் முன்னிலைப் படுத்தியபோதும், அதன் நிலையை  வலுவாக்கி  கொள்ள  நீண்ட நேரம் காத்திருக்கவில்லை.

இறுதி விசிலை நெருங்க, சிலாங்கூர் 89 வது நிமிடத்தில் ஆல்வின் ஃபோர்ட்ஸ் மூலம் மேலும் ஒரு கோலை சேர்த்தது, அதைத் தொடர்ந்து குவென்டின் செங் இரண்டாவது பாதியில் கூடுதல் நேரத்தில்  ஒரு கோல் அடித்து  வெற்றியை உறுதி செய்தார்.

சிலாங்கூர் இப்போது ஆறு ஆட்டங்களுக்குப் பிறகு 12 புள்ளிகள் பெற்றுள்ளது, நடப்பு சாம்பியன் ஜோகூர் தாருல் தாசி மை (JDT)  விட 6 புள்ளிகள் பின்தங்கிய நிலையில்  இருக்கிறது.   ஜோகூர் தாருல் தாசிம் இந்த சீசனில் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை, பினாங்கு ஆறு புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

இதற்கிடையில், கோலாலம்பூர் (கேஎல்) சிட்டி எஃப்சி மற்றும் ஸ்ரீ பஹாங் எப்சி அணிகள் கோலாலம்பூர் கால்பந்து மைதானத்தில் சிராஸ் மைதானத்தில் நடந்த மோதலில் கோல் எதுவும் அடிக்கவில்லை.

இதன் விளைவாக KL சிட்டி ஐந்து ஆட்டங்களில் விளையாடி எட்டு புள்ளிகளைச் சேகரித்து ஐந்தாவது இடத்தில் உள்ளது.  5 புள்ளிகளுடன் 10வது இடத்தில் இருக்கும் ஸ்ரீ பகாங், கடந்த மூன்று ஆட்டங்களில் இரண்டு முறை தோல்வி மற்றும் ஒரு முறை டிரா செய்து வெற்றியை தேடி இன்னும் திணறுகிறது.


Pengarang :