ANTARABANGSAMEDIA STATEMENTNATIONAL

பி.கே.என்.எஸ். விழாவில் 10,000 பார்வையாளர்கள் வருகை

கோல சிலாங்கூர், ஜூலை 28 – கோம்பாக்கின் கோத்தா புத்ரியில் இன்று முடிவடையும் சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தின் பீலே பி.கே.என்.எஸ். விழாவில் 10,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவின் முதல் நாளில் கிடைத்த வரவேற்பு மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது என்று பி.கே.என்.எஸ். விற்பனை மேலாளரும் திட்ட இயக்குனருமான இஷாக் ஹாஷிம் கூறினார்.

நேற்றைய பார்வையாளர் வருகையின் அடிப்படையில்  இந்த நிகழ்வுக்கு நல்ல  வரவேற்பைப் பார்க்கிறோம். இன்று காலை 8 மணிக்கு ஜூம்பா நிகழ்வுடன்  தொடங்கி மாலை வரை நீடிக்கிறது. இரவு நடைபெற்ற  கலைநிகழ்ச்சியில்   ​​​​கூட்டம் மிகவும் அதிகமாக இருப்பதைக் கண்டேன் என்றார் அவர்.

இந்த இரண்டு நாள் நிகழ்வில்  10,000க்கும் அதிகமான பார்வையாளர்கள் வருவார்கள் என்று மதிப்பிடுகிறோம். இந்த திட்டம், நடப்பு மற்றும்   சாத்தியமான மற்றும் சொத்து  வாங்குபவர்களுடன் அணுக்கமான உறவை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பார்வையாளர்கள் வசதிக்காக கலைவிழா பகுதிக்கு பக்கத்தில் கார் நிறுத்துமிடம் மற்றும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்திய்ள்ளோம் என்றார் அவர்.

நேற்று இங்குள்ள  கோத்தா புத்ரி சொத்து விற்பனை மையத்தில்  பி.கே.என்.எஸ்  கலைவிழாவில்   சந்தித்தபோது அவர் இவ்வாறு  கூறினார். பி.கே.என்.எஸ். துணை தலைமை நிர்வாக அதிகாரி (மேம்பாடு) முகமது கமர்சன் முகமது ரைஸ் இவ்விழாவை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் லேசர் கண்காட்சி, பட்டம் பறக்கவிடுதல், கயிறு இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல்,  மினி மிருகக்காட்சிசாலை, உணவு லோரிகள் மற்றும் உணவுக் கடைகள் ஆகியவற்றுடன் சமூக விளையாட்டு நடவடிக்கைகளும்  முக்கிய ஈர்ப்பாக விளங்கியது என்றும் இஷாக் கூறினார்.


Pengarang :