NATIONAL

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் உடனடி நன்கொடையாக ரிம 5,000 வழங்கப்பட்டது – பிரதமர்

கோலாலம்பூர், ஜூலை 29: நேற்று கம்போங் மஞ்சோய், தம்புன்,பேராக்  என்ற இடத்தில் உள்ள எட்டு வீடுகள் தீப்பிடித்து நாசமாகின. அதில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உடனடி நன்கொடையாக ரிம5,000 வழங்கினார்.

இந்த நன்கொடையை தனது அரசியல் செயலாளர் முகமட் கமில் அப்துல் முனிம் மூலம் வழங்கப்பட்டது என தம்புன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வர் தெரிவித்தார்.

“தீயணைப்புத் துறையின் முதற்கட்ட அறிக்கையில், ஷார்ட் சர்க்யூட் காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

“சம்பந்தப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் எனது சார்பாக RM5,000 உடனடி நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது” என்று அவர் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவின் மூலம் தெரிவித்தார்.

தீ விபத்தில் சிக்கியவர்களுக்கு சோதனையை எதிர்கொள்வதில் இறைவன் மன தைரியம் வழங்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் பிரார்த்தனை செய்தார்.

நேற்று பிற்பகல் 5.40 மணியளவில் ஏற்பட்ட தீயில் எட்டு வீடுகள் எரிந்து நாசமாகின. அதில் ஆபத்தான உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

– பெர்னாமா


Pengarang :