NATIONAL

தரவு மையங்களின் பயன்பாட்டை மேம்படுத்த தரவு ஆணையத்தை நிறுவப் பரிந்துரை

கோலாலம்பூர், ஜூலை 29 – நாட்டில் தரவுகளைப் பாதுகாப்பதற்கும், தரவு மையங்களின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும் போதுமான கட்டமைப்புகள் மற்றும் கொள்கைகளை உருவாக்குவதற்கு ஒரு தரவு ஆணையத்தை நிறுவ டிஜிட்டல் அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.

இந்த ஆணையத்தை நிறுவ, அமைச்சகம் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டம் 2010 ஐ திருத்த திட்டமிட்டுள்ளது என டிஜிட்டல் அமைச்சர் கோபிந் சிங் தெரிவித்தார். இது அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் நேஷனல் பிஎச்டி மற்றும் சைபர் செக்யூரிட்டி மலேசியா இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார். சைபர் செக்யூரிட்டி மலேசியா இன்று மலேசியாவின் 5ஜி நெட்வொர்க்குகளின் இணைய பாதுகாப்பை மேம்படுத்துகிறது.

“புதிய தொழில்நுட்பங்கள் பெருகிய வரும் நிலையில் அவை செயற்கை நுண்ணறிவைச் சார்ந்து இருக்கின்றன. மேலும், இந்தத் தொழில்துறையின் வெற்றிக்கான மிக முக்கியமான அம்சம் தரவு மையப் பிரிவை வலுப்படுத்துவது என்பதை அரசாங்கங்கள் அறிந்திருக்கின்றன.

“அதனால்தான் அரசாங்கம் பெரிய முதலீடுகளைக் கொண்டுவருவதில் கவனம் செலுத்தியுள்ளது, குறிப்பாக இந்தப் பிரிவில், கூகுள், மைக்ரோசாப்ட், பைட் டான்ஸ் மற்றும் பலவற்றின் முதலீடுகளின் அளவு மிகப் பெரியது,” என்று அவர் கூறினார்.

மலேசியாவில் ஒரு தரவுக் குழுவும் ஆணையரும் இருப்பதாக கோபிந் கூறினார்.

“நான் கவனம் செலுத்த விரும்புவது தளத்தைப் பயன்படுத்துவதிலும், இந்தக் குழுவை முதலில் உருவாக்குவதிலும். மேலும் முன்னேறிச் செல்வதிலும், இந்தக் குழுவை ஒரு தரவு ஆணையமாக மாற்ற வேண்டும் என்று நாங்கள் அரசாங்கத்திற்கு முன்மொழிகிறோம். அதன் மூலம் தரவுகளில் அதிக கவனம் செலுத்த முடியும்,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :