NATIONAL

12 பகுதிகளில் வெப்ப வானிலை எச்சரிக்கை நிலையில் பதிவு

ஷா ஆலம், ஜூலை 29: இன்று நாடு முழுவதும் மொத்தம் 12 பகுதிகளில் வெப்ப வானிலை எச்சரிக்கை நிலையில் (நிலை 1) பதிவாகியுள்ளது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி, தீபகற்பத்தில் பேராக்கில் லாருட், மாத்தாங், கெடாவில் கோலா மூடா மற்றும் கிளந்தானில் கோலா கிராய்

ஆகிய பகுதிகளில் வெப்பமான வானிலை பதிவாகியுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட் மலேசியா) முகநூலில் பதிவிட்டுள்ளது.

பியூஃபோர்ட், சபாவிலும் இதே வானிலை பதிவாகியுள்ளது. மேலும், சரவாக்கில் கூச்சிங், ஸ்ரீ அமான், லுபோக்ஹய்நு, கபிட், சிபு, மீரி, தெலாங் உசான் மற்றும் மருடி ஆகிய எட்டு பகுதிகளிலும் இதே வானிலைதான் நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.

“தினசரி அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தது மூன்று நாட்களுக்குப் பதிவாகினால் வெப்ப வானிலை நிலை ஒன்றாகக் கருதப்படும்.

“தினசரி வெப்ப வானிலையின் நிலை குறித்த சமீபத்திய தகவலுக்கு, https://www.met.gov.my/iklim/status-cuaca-panas/ ஐப் பார்க்கவும்,” என்று தெரிவிக்கப்பட்டது.


Pengarang :