SELANGOR

பிங்காஸ் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தாமான் டெம்ப்ளர் தொகுதி மக்களுக்கு வேண்டுகோள்

கோம்பாக்,  ஆக 2-    மாதம் 5,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் தாமான் டெம்ப்ளர் தொகுதியைச் சேர்ந்த குடும்பங்கள் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்திற்கு  (பிங்காஸ்) விண்ணப்பிக்க அழைக்கப்படுகின்றனர்.

ஆண்டுக்கு 3,600 வெள்ளி உதவித் தொகை பெற வகை செய்யும் இந்த திட்டத்திற்கு
www.bingkasselangor.com என்ற அகப்பக்கம் மூலம்   வரும் ஆகஸ்டு 15ஆம் தேதிக்குள்  விண்ணப்பிக்கலாம் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்ஃபால் ஷாரி கூறினார்.

இதுவரை இத்தொகுதியைச் சேர்ந்த 475 குடியிருப்பாளர்கள் இந்த உதவித் திட்டத்திற்கு  விண்ணப்பித்துள்ளனர். இன்னும்  ஒதுக்கீடு காலியாக உள்ளதால்  இணையம் வழி விண்ணப்பங்களைச் செய்ய நாங்கள்  வரவேற்கிறோம்.

தங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப் பட்டுள்ளதா என்பதை வரும் ஆகஸ்டு 15ஆம் தேதிக்குப் பிறகு செலங்கா செயலி வாயிலாக சரிபார்க்கும்படி  விண்ணப்பதாரர்களைக் கேட்டுக்கொள்கிறோம்  என்று அவர் நேற்று கூறினார்.

ஸ்மார்ட் சிலாங்கூர் அன்னையர் பரிவுத் திட்டம்  (கிஸ் ) மற்றும் தனித்து வாழும் தாய்மார்களுக்கான கிஸ் ஐ.டி. திட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக விளங்கும் இந்த பிங்காஸ் திட்டம்  10 கோடியே 80 லட்சம் வெள்ளி ஒதுக்கீட்டை உள்ளடக்கிய இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங்கில்  ஒரு பகுதியாக விளங்குகிறது.

இத்த திட்டத்தின் மூலம்   தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் மாதத்திற்கு 300  வெள்ளி அல்லது வருடத்திற்கு 3,600 உதவியைப் பெறுவார்கள். செலவு செய்வதை எளிதாக்குவதற்காக  பயனர்களுக்கு (Wavpay) இ-வாலட் பயன்பாட்டின் மூலம் பணம் விநியோகிக்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் அதிகமான  குடும்பங்கள் பலன்களைப் பெறுவதை உறுதி செய்வதற்காக இத்திட்டத்திற்கான வருமான வரம்பை மாநில அரசு 3,000 வெள்ளியிலிருந்து 5,000 வெள்ளியாக  ஜூலை 5ஆம் தேதி தளர்த்தியது.


Pengarang :