ANTARABANGSASUKANKINI

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 9 வது நாளான நேற்று பதக்க பட்டியலில் அமெரிக்கா முன்னணி

பாரிஸ், ஆகஸ்ட் 5 – பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 9 வது நாளான நேற்று பதக்க வரிசையில் முதன் முறையாக அமெரிக்க முன்னிலை வகிக்கிறது.  நேற்று மீண்டும்  ஒரே நாளில்  5 தங்கம்  2 வெள்ளி மற்றும் 3 வெங்கலம் பெற்று  முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது, அதே வேளையில் சீனாவும் நேற்று 3 தங்கம் மற்றும் 3 வெள்ளி  2 வெண்கல பதக்கம் பெற்று பதக்க பட்டியலில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது பேன்று மலேசியாவின் பூப்பந்து வீரர்கள் முலமே முதல் பதக்கத்தை பெற்றது.
இன்று  நடைபெற்ற வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் உலகின் இரண்டாம் நிலை ஜோடியான டென்மார்க்கின் கிம் அஸ்ட்ரப்-ஆண்டர்ஸ் ஸ்காரப் ராஸ்முசென் ஜோடியிடம் இருந்து கடும் சவாலை எதிர் கொண்ட , மலேசிய ஆடவர் இரட்டையர் ஜோடி ஏரோன் சியா-சோ வூய் இக் 16-21, 22-20, 21-19 புள்ளி கணக்கில் வெற்றி பெற்று. மலேசியாவுக்கு ஒரு வெங்கல  பதக்கத்தை வென்றனர்

Pengarang :