NATIONAL

கல்லீரல் நோய் மற்றும் சிறுநீரகப் பிரச்சனையால் அவதிப்படும் கரம் சிங் வாலியாவுக்குப் பிரதமர் நன்கொடை வழங்கினார்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 8: கல்லீரல் நோய் மற்றும் சிறுநீரகப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான உடல்நிலையை கொண்டுள்ள பிரபல சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் டத்தோ கரம் சிங் வாலியாவுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நன்கொடை வழங்கினார்.

நேற்று பிரதமர் தனது அரசியல் செயலாளர் அஹ்மட் ஃபர்ஹான் ஃபௌசியால் இந்த நன்கொடையை வழங்கினார், மேலும் அச்சமயம் சுற்றுச்சூழலை அழிக்கும் சாகசக்காரர்களின் சீரழிவை அம்பலப்படுத்திய முன்னாள் டிவி 3 பத்திரிகையாளரின் அனுபவத்தைப் பற்றி பேச வாய்ப்பு கிடைத்தது என முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

நோயால் பாதிக்கப்பட்டு தற்போது கவலைக்கிடமாக உள்ள 65 வயதான கரமின் உடல்நிலை குறித்து தனக்குத் தெரிவிக்கப் பட்டதாகப் பிரதமர் கூறினார்.

“இந்த நன்கொடை அவரின் மருத்துவ செலவுகளின் சுமையை குறைக்கும் என்று நம்புகிறேன்.

“சகோதரர் கரம் சிங் விரைவில் குணமடையவும், சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தைப் பற்றி இளைஞர்களுக்குக் கற்பிக்கவும் நான் பிரார்த்திக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :