NATIONAL

கட்டொழுங்கு, தன்னம்பிக்கையை வலுப்படுத்த இளையோர் சேமப் படையில் சேர வேண்டும்

ஷா ஆலம், ஆக. 9 – கட்டொழுங்கை கடைபிடிப்பதற்கும் உடல் மற்றும்
மனோ ரீதியில் வலுப்பெற்றவர்களாக திகழ்வதற்கும் ஏதுவாக இளையோர்
இராணுவ சேமப் படையில் சேர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

அங்கு வழங்கப்படும் பல்வேறு பயிற்சிகள் மூலம் அவர்கள் இராணுவம்
தொடர்பான அறிவாற்றலைப் பெறுவதற்கும் தன்னம்பிக்கையை வளர்த்துக்
கொள்வதற்கும் வாய்ப்பு கிட்டும் என்று இளைஞர் மேம்பாட்டுத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.

பல்வேறு பின்னணிகளைக் கொண்ட பெரும் எண்ணிக்கையிலான
மாணவர்கள் இந்த சேமப் படையில் பங்கேற்பது குறித்து நான்
மகிழ்ச்சியடைகிறேன். நானும் கடந்த 2015ஆம் ஆண்டு இந்த பயிற்சியில்
பங்கு கொண்டுள்ளேன் என்று அவர் சொன்னார்.

இராணுவ சேமப் படையில் அதிகமான இளைஞர்கள் இணைவதை தாம்
பெரிதும் வரவேற்பதாக அவர் எனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்தார்.

முன்னதாக அவர், சுங்கை பூலோ இராணுவ முகாமில் 502வது சேமப்படை
படைப்பிரிவின் 3/2024 தொடருக்கான இளம் தன்னார்வ வீரர்களின்
அடிப்படை பயிற்சியை தொடக்கி வைத்தார்.


Pengarang :