NATIONAL

யமஹா RX-Z மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்கள் காணாமல் போன வழக்கில் மூன்று காவல்துறையினர் கைது

சுகாய், ஆகஸ்ட் 9: கடந்த செவ்வாய்கிழமை கெமாமன் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் உள்ள வழக்கு சம்பந்தப்பட்ட பொருட்கள் அறையிலிருந்த யமஹா RX-Z மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்கள் காணாமல் போனது தொடர்பான விசாரணைக்காக மூன்று காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் 26 முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் என கெமாமன் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.மோட்டார் சைக்கிள் எஞ்சின் உதிரி பாகங்கள் மாயமானது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து சம்பந்தப்பட்ட காவல்துறை உறுப்பினர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

“மேல் விசாரணைக்காக அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கு முன்னர் நாங்கள் விசாரணைகளை மேற்கொண்டோம்.

“மேலும் விசாரணையில் இரண்டு சந்தேக நபர்கள் ஒரே மாதிரியான மோட்டார் சைக்கிள் மற்றும் RX-Z மோட்டார் சைக்கிளின் பெரிய ரசிகர்கள் என்று கண்டறியப்பட்டது,” என்று அவர் கூறினார்,

அனைத்து சந்தேக நபர்களின் விசாரணைக்கான தடுப்பு காவல்களும் இன்றுடன் முடிவடைந்தது. மேலும் இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 379A பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது. கொடுத்த அதிகாரத்தையும் நம்பிக்கையையும் துஷ்பிரயோகம் செய்யும் எந்த உறுப்பினருடனும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று ஹன்யான் தெரிவித்தார்.


Pengarang :