NATIONAL

இலவச மனநல ஆலோசனை சேவையை சிலாங்கூர் பிபிடிகள் வழங்குகின்றன

ஷா ஆலம், ஆகஸ்ட் 14: மனநல பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவ மூன்று பிபிடிகளில் இலவச ஆலோசனை சேவையை சிலாங்கூர் பிபிடி மையம் (பிகேஎஸ்) வழங்குகிறது.

சிப்பாங், அம்பாங் ஜெயா, செலாயாங் ஆகிய நகராண்மை கழகங்களின் ஆலோசனை மையங்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்திருக்கும் என அதன் ஆலோசகர் முகமட் ஃபுவாட் முகமட் அலி கூறினார்.

“மேலும், ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாகம், செக்‌ஷன் 14இல் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், சனி மற்றும் ஞாயிறு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் இதே சேவை வழங்கப்படுகிறது” என்று இன்று “ஹை சிலாங்கூர்“ என்ற நிகழ்ச்சியில் அவர் கூறினார்.

இந்தத் திட்டத்தின் வழி, பகடிவதையால் பாதிக்கப்பட்டவர்கள், தகுதியான ஆலோசகர்களின் உதவியை நாடுவதன் மூலம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தைரியமாக முன் வந்து பகிர்ந்து கொள்ளுமாறு ஃபுவாட் கேட்டுக் கொண்டார்.

“ஆலோசனை மற்றும் உளவியல் சேவைகள் தேவைப்படும் நபர்கள் சிலாங்கூர் ஆலோசனை மையத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு உதவ நாங்கள் எப்போதும் தயராக இருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

இச்சந்திப்பை மேற்கொள்ள விரும்புவோர் 03-5519 0500 அல்லது வாட்ஸாப் 013-300 9291 ஐ அழைக்கலாம் மற்றும் சிலாங்கூர் ஆலோசனை மையத்தின் முகநூலைப் பின்தொடரலாம்.

1990 ஆம் ஆண்டு முதல் நிறுவப்பட்ட பிகேஎஸ், சிலாங்கூர் மாநில அரசாங்கச் செயலர் அலுவலகத்தின் மனிதவள மேலாண்மைப் பிரிவின் கீழ் இயங்கி வருகிறது, இது அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச ஆலோசனை மற்றும் உளவியல் சேவைகளை வழங்குகிறது.


Pengarang :