ALAM SEKITAR & CUACANATIONAL

12 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 20: இன்று மாலை 4 மணி வரை சிலாங்கூரில் உள்ள ஆறு மாவட்டங்கள் உட்பட 12 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.

சிலாங்கூர் உட்பட கெடா, பினாங்கு, பேராக், கிளந்தான், திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர், சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகியக் கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :