NATIONAL

 22,840 பிங்காஸ் விண்ணப்பங்கள் அங்கீகரிப்பட்டன

ஷா ஆலம், ஆகஸ்ட் 21: இறுதி நாளான ஆகஸ்ட் 15க்குப் பிறகு  மொத்தம் 22,840 பிங்காஸ் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்ட தாகச் சமூக நலன் ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

இதுவரை 7,160 ஒதுக்கீடுகள் மீதமுள்ளதாகவும், தகுதியுடையவர்கள் மட்டும் 24 மாதங்களுக்கு மாதந்தோறும் RM300 பெறுவதை உறுதி செய்வதற்காக விண்ணப்பதாரர்களின் பட்டியலைத் தேடி வருவதாகவும் அன்பால் சாரி கூறினார்.

“ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 15 வரை நாங்கள் மொத்தம் 88,286 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளோம். எங்களிடம் இன்னும் ஒதுக்கீடுகள் உள்ளன. விண்ணப்பங்கள் வெற்றியடையாதவர்கள் தொகுதி அலுவலகங்களில் மேல்முறையீடு செய்யலாம்.

“மேல்முறையீடு செய்யும் விண்ணப்பதாரர்களின் தகுதிகளை தொகுதி அலுவலகம் ஆய்வு செய்யும். மக்களின் சுமையை குறைக்கும் அரசின் நடவடிக்கைகளில் இந்த திட்டமும் ஒன்றாகும்” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

அதிகமானோர் பயன் பெறுவதற்கு ஏதுவாகப் பிங்காஸ் திட்டத்திற்கான
வருமான வரம்பு 3,000 வெள்ளியிலிருந்து 5,000 வெள்ளியாக
உயர்த்தப்படுவதாக அன்ஃபால் சாரி கடந்த ஜூலை 5ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :