SELANGOR

#BundleRaya திட்டத்தின் மூலம் 1,000க்கும் மேற்பட்ட ஆடைகள் சேகரிப்பு

ஷா ஆலம், ஏப் 5: #BundleRaya திட்டத்தின் மூலம் கம்போங் துங்கு தொகுதியின் சமூக
சேவை மையம் 1,000க்கும் மேற்பட்ட ஆடைகளை சேகரித்தது.

மூன்றாம் ஆண்டை எட்டிய இத்திட்டம், குடியிருப்பாளர்களுக்குப் புதிய உடைகளை
நன்கொடையாக வழங்கும் பல நிறுவனங்களின் ஆதரவையும் பெற்றுள்ளது என
சட்டமன்ற உறுப்பினர் லி யி வேய் கூறினார்.

மார்ச் 20 ஆம் தேதி தொடங்கி ஒரு வாரத்திற்கு இந்த உடை சேகரிக்கும் திட்டத்தை
நாங்கள் நடத்தினோம், மேலும் 1,000க்கும் மேற்பட்ட புதிய ஆடைகள் மற்றும் இன்னும்
நன்றாக இருக்கும் பயன்படுத்திய ஆடைகள் சேகரிக்கப்பட்டன.

குறைந்த வருமானம் பெறும் பிளாட் ஸ்ரீ அமானில் வசிப்பவர்களுக்கு இந்த உடைகள்
அனைத்தையும் நாங்கள் விநியோகிக்கிறோம்“ என்று சிலாங்கூர்கினி தொடர்பு
கொண்டபோது அவர் கூறினார்.

இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நன்கொடைகள் ஐடில்பித்ரியைக் கொண்டாடும்
குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடும் என்றும் அவர் நம்புகிறார்.

“அனைத்து நன்கொடையாளர்களுக்கும் நன்றி, குறிப்பாக “Khatam Festive Apparel Sdn
Bhd“ நிறுவனத்திற்கு, காரணம் பல்வேறு புதிய ஆடைகளை நன்கொடையாக
வழங்கியது“ என்று அவர் கூறினார்.


Pengarang :