MEDIA STATEMENT

உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் அமைச்சு பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும்

நாட்டில் பொருட்களின் விலை கட்டுப்பாடின்றி ஏறிக்கொண்டிருக்கும் சூழலில் அதனை கட்டுப்படுத்துவதில் விவேகமான செயல்பாட்டினை மேற்கொள்ளாமல் வெறும் 6 பொருட்களின் விலை மட்டுமே கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் அமைச்சு தெரிவித்திருப்பது அதன் விவேகமற்ற போக்கின் வெளிபாடு என காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு மணிவண்ணன் குறிப்பிட்டார்.

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுப்பாடு  இன்றி உயர்ந்துக் கொண்டிருக்கும் நிலையில் அதனை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையினை மேற்கொள்ளாமல் வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பது அர்த்தமற்ற செயல் என்றும் அவர் கூறினார்.

விலை கட்டுப்பாடு தொடர்பில் நாட்டில் அமலில் இருக்கும் சட்ட விதிகளுக்கு ஒப்ப கிடுகிடுவென உயர்ந்துக் கொண்டிருக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலையை அமைச்சும் தேசிய முன்னணி அரசும் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.மக்களின் சுமையையும் பிரச்னையையும் ஆராயாமல் தொடரும் விலை ஏற்றங்களை அமைச்சும் தேசிய முன்னணி அரசாங்கம் கண் மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்ககூடாது என்றும் சாடினார்.

தொடரும் விலை ஏற்றங்களை அலட்சியம் செய்து விட்டு பெருநாட்கள் மற்றும் விழா காலங்களில் மட்டும் விலையை கண்காணிப்பதும் அதற்கெதிராய் களம் காண்பதும் அர்த்தமற்றது எனவும் கூறிய அவர் நாட்டின் பொருளாதாரத்தை நடப்பியல் சூழலில் மக்கள் நன்கு உணர்ந்துள்ள வேளையில் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு பொருளாதார வல்லுனர்கள் தேவையில்லை என்றும் கூறினார்.மேலும்,1எம்டிபி விவகாரத்தால் நாட்டின் பொருளாதார சூழலை மக்கள் நன்கு அறிந்துமுள்ளனர் என்றார்.

 

 

 

ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியில் இருப்பதால் மலேசியர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதையும் சுட்டிக்காண்பித்த மணிவண்ணன்  ரிங்கிட்டின் வீழ்ச்சி ஒரு புறம் இருக்க பொருட்களின் விலை ஏற்றம் மறுப்புறம் அழுத்த மக்கள் பெரும் சுமையையும் சவாலையும் இந்த 2017ஆம் ஆண்டில் எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர் நினைவுறுத்தினார்.

 

 

 


Pengarang :