NATIONAL

நஜிப்பிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன் – டோனி புவா

ஷா ஆலாம் – முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட நஜிப் மற்றும் அவரது தலைமைத்துவ நிர்வாகத்தின் நிதி முறைகேடு தொடர்பிலான தகவலுக்காக தாம் ஒருபோது நஜிப்பிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன் என பெட்டாலிங் உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா கூறினார்.

தாம் முகநூலில் பதிவேற்றம் செய்த தகவல் தொடர்பில் நஜிப்பிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பதிவேற்றம் செய்ததை அகற்ற வேண்டும் எனவும் வழக்கறிஞர் நோட்டிஸ் மூலம் விடப்பட்டிருக்கும் கோரிக்கைக்கு செவிசாய்க்க போவதில்லை என்றும் டோனி புவா கூறினார்.

முகநூலில் பதிவேற்றம் செய்தது எனது தனிப்பட்ட கருத்தல்ல.அஃது சரவாக் ரீப்போர்ட் மற்றும் வோல் ஸ்ட்ரெட் ஜெர்னல் ஆகிய செய்திதளங்காளில் வெளியான செய்திகளே என்றும் கூறிய அவர் இந்த விவகாரத்தில் நஜிப்பிடம் தாம் எழுத்துப்பூர்வமான மன்னிப்பையோ அல்லது நாட்டின் முதன்மை பத்திரிக்கைகளிலோ மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றார்.

 

 

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி டோனி புவா தனது முகநூலில் “BN Govt Abandons all Bills to give precedence to PAS’ RUU355 Private Member’s Bill”.எனும் தலைப்பிலான  தகவலை பதிவேற்றம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழு நாள் அவகாசத்தில் டோனி புவா மன்னிப்பு கோர வேண்டுமெனும் நோட்டிஸ் அனுப்பட்டிருந்தாலும் அதனை தாம் செவிமடுக்க போவதில்லை என டோனி புவா வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

 


Pengarang :