SELANGOR

ஜமால் யுனுஸ் மற்றும் 9 பேருக்கு வெ.3000 ஜாமின்

கோலாலம்பூர் – சிவப்பு சட்டை இயக்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யுனுஸ் மற்றும் அவரது 9 ஆதரவாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட வழக்கில் அவர்கள் அனைவரும் குற்றத்தை  மறுத்த வேளையில் வெ.3000 ஜாமின் தொகையோடு ஒரு தனி நபர் உத்தரவாததின் அடிப்படையில் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

சட்டத்திற்கு புறம்பாய் அம்பாங் ஜெயாவிலுள்ள அம்பாங் போய்ன்ட் பேராங்காடியில் மேற்கொண்ட நடவடிக்கைக்காக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

இன்று காலை அம்பாங் செக்க்ஷன் நீதிமன்றத்தில் ஜமால் உட்பட அவரது 9 ஆதரவாளர்கள் மீதிலான குற்றப்பதிவு வாசிக்கப்பட்டது.தங்களுக்கு எதிரான குற்றத்தை அவர்கள் அனைவரும் மறுத்தனர்.

வழக்கு வாதத்தை செவிமடுத்த நீதிபதி ருஷான் லுட்பி முகமட் ஒவ்வொருவருக்கும் வெ.10,000ஐ ஜாமின் தொகையாக அறிவித்தார்.இருப்பினும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செய்துக் கொண்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் அந்த ஜாமின் தொகை வெ.3000ஆக குறைக்கப்பட்டதோடு ஒரு தனிநபர் உத்தரவாதத்துடன் ஜாமின் வழங்கப்பட்டது.

பின்னர் இந்த வழக்கினை வரும் மே மாதம் 3ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.இந்த வழக்கில் ஜமாலுடன் ஹரிப் அபு பாக்கர் (47),முகமட் ஷாபுடின் அபு ஹசான் (47),ரெஷா ஜாமின்(37),இஸ்ரூல் இட்ரிஸ் (32),ஹஸ்னேன் ஸிக்ரி ஹரிசன் (24),முகமட் பாஃயிஸ் அமிருல் மாஹசன் (22),முகமட் யுசோப் ஷாரிப்(26),அப்துல் ரசாக் ஹசான் (29)மற்றும் ஆர்.பாலகுரு (30) ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


Pengarang :