SELANGOR

குப்பைகளை அகற்றுவதில் ஷா ஆலாம் மாநகராட்சி தரம் மேம்பாடு செய்துள்ளது

ஷா ஆலாம் – குப்பைகளை அகற்றுவதில் தனித்துவமாய் இயங்கி வரும் ஷா ஆலாம் மாநகராட்சி மன்றம் அதன் சேவை தரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் குப்பைகளை அகற்றும் அதன் லாரிகளை விவேகமாய் கண்காணிக்க வாகன இடம் கண்காணிப்பு கருவியை பொருத்தியுள்ளதாகவும் அதன் மேயர் டத்தோ அமாட் ஷாஹாரின் முகமட் சாஹாட் குறிப்பிட்டார்.

தூய்மையான மற்றும் எழில் மிக்க நகராய் ஷா ஆலாம் நகரம் உருவாக வேண்டும் என்பதே பெரு இலக்கு என கூறிய அவர் தற்போது தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்குவதற்காக 26 அதீநவின லாரிகள் செயல் முறையில் இருப்பதாகவும் அஃது செக்க்ஷன் 10,11,12இல் அதன் செயல்பாட்டினை விவேகமாய் மேற்கொள்ளும் என்றும் கூறினார்.

 

MBSA KOMPAKTOR 1  அதேவேளையில் ஷா ஆலாம் மாந்கராட்சியின் சின்னமும் அதன் தனித்துவ அடையாளங்களும் அந்த நவீனத்துவ லாரிகள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் கூறிய அவர் அதன் பணியாளர்களும் தனித்துவமாய் பார்த்தவுடன் அடையாளம் காணும் நிலையில் இருப்பர் என்றும் கூறினார்.

இதன் மூலம் குப்பைகளை அகற்றுவதில் சிறந்த சேவையையும் பங்களிப்பினை வழங்கிட முடியும் என பெரிதும் நம்புவதாக கூறிய அவர் சிலாங்கூர் முழுவதும் குப்பைகளை அகற்றுவதில் மாநில அரசாங்கம் தனித்துவ கவனம் செலுத்தி வருவதாகவும் மாநில அரசாங்கத்தின் இலக்கை ஷா ஆலாம் மாநகராட்சி செம்மையாக நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அவர் பெருமிதமாய் கூறினார்.

வாகன இடம் கண்காணிப்பு கருவிகள் பொருத்திய அதீநவீன குப்பைகள் அகற்றும் லாரிகளை அறிமுகம் செய்து வைத்த நிகழ்வில் அவர் இதனை தெரிவித்தார்.

 

 


Pengarang :