SELANGOR

முன்னால் இராணுவ வீரர்களை நினைவில் கொள்ள வேண்டும்

கோம்பாக் – கோம்பாக்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் மாநில அரசாங்கத்தின்ப ரிவு மிக்க திட்டமான “பெடுலி சிஹாட்” திட்டத்தை பத்து கேவ் அடுக்குமாடி வீடமைப்பில் தொடக்கி  வைத்த பின்னர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி நாட்டின் முன்னால் இராணுவ வீரகளின் தியாகத்தையும் நினவுக்கூர்ந்து அவர்களை சந்திக்க சென்றார்.

நாட்டின் முன்னால் மற்றும் மூத்த இராணுவ வீரர்களை கம்போங் வீரா  டாமாயில் மந்திரி பெசார் சென்று நலம் விசாரித்தார்.இந்த வருகையின் போது மூன்று முன்னால் இராணுவ வீரர்களுக்கு மந்திரி பெசார் அன்பளிப்பு வழங்கினார்.

 

 

MB VKU                                        இந்த அன்பளிப்பானது சம்மதப்பட்ட முன்னால் இராணுவ வீரர்களுக்கு மாநில அரசாங்கம் வழங்கிடும் அங்கீகாரம் நன்றி நல்விதழும் ஆகும் என்றும் மந்திரி பெசார் கூறினார். நாட்டின் பாதுகாப்பிற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இராணுவ வீரர்கள் மீது எப்போதும் அரசாங்கத்தின் கவனம் இருக்க வேண்டும் என்றார்.

அவர்களின் முதுமைக்காலம் நன் நிலையில் எவ்வித சிக்கலுமின்றி நகர்வதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்ட அவர் இம்மாநிலத்தின் முன்னால் இராணுவ வீரர்களின் நலனில் தொடர்ந்து மாநில அரசாங்கம் கவனம் செலுத்தும் எனவும் குறிப்பிட்டார்

முன்னால் மற்றும் மூத்த இராணுவ வீரர்களின் நலன் காக்க வேண்டியே மாநில அரசாங்கத்தின் 2017ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சுமார் 1 மில்லியன் ரிங்கிட்டை மாநில அரசு ஒதுக்கியதாகவும் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார்.

 

MB VKU 2 MB VKU 3 MB VKU 4

-nR-


Pengarang :