SELANGOR

சிற்றோடை மேம்பாட்டுப் பணிகள் நிறைவாக உள்ளது

பத்து கேவ் – அனாக் சுங்கை உடாங் சிற்றோடை வடிகால் அமைப்பு மேம்பாட்டு பணி நிறைவாக இருப்பதாக மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார்.தாமான் செலாயாங் பகுதியில் அமைந்திருக்கும் அந்த சிற்றோடையில் மேற்கொள்ளப்பட்ட வடிகால் அமைப்பு அதன் இலக்கை எட்டியுள்ளதோடு  மழைக்காலங்களி ஏற்பட்ட வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதாக கூறினார்.

இந்த மேம்பாடு பணி நிறைவாக செய்து முடிக்கப்பட்டிருப்பதாகவும் மாநில அரசாங்கத்தின் திட்டம் அதன் இலக்கை எட்டியுள்ளதாகவும் கூறிய அவர் இனி மழைக்காலங்களில் வெள்ளப் பிரச்னை இருக்காது என்றும் மக்கள் நிம்மதி பெரும் மூச்சு விடுவார்கள் எனவும் மந்திரி பெசார் குறிப்பிட்டார்.

இதற்கிடையில்,அந்த பகுதி மக்கள் குப்பை தொடர்பிலான பிரச்னையை தன் கவனத்திற்கு கொண்டு வந்ததாக கூறிய மந்திரி பெசார் அஃது முறையாக ஆராயப்பட்டு  விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

 

CP2A0122-1280x853      இதற்கிடையில் பொது மக்கள் கொடுத்த ஆறுகளில் நிரம்பி வழியும் குப்பைகளை அகற்றும் பணியை நீர்ப்பாசன மற்றும் வடிகால்  வாரியம் துள்ளியமாய் மேற்கொள்ளும் என்றும் கூறிய அவர் ஆறுகளில் குப்பைகளை வீசுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தற்போதைய சூழலில் வாரம் ஒரு முறை ஆற்றை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதேவேளையில் கடும் மழைக்காலங்களில் அந்நடவடிக்கை சூழலுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினார்.

இந்த சிற்றோடை வடிகால் அமைப்பு மேம்பாட்டுப் பணி சுமார் 7 மில்லியன் செலவினை உட்பட்டது என்றும் கூறிய அவர் இஃது 1.4 கி.மீட்டர் தூரத்தை கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

 


Pengarang :