SELANGOR

விவேக கார் நிறுத்துமிடம்: எம்பிஎஜே கட்டண முறையை சுலபமாக்கியது

அம்பாங், 17 ஏப்ரல்: அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஎஜெ) “ஸ்மார்ட் பார்க்கிங்” முறையில் கார் நிறுத்துமிட கூப்பனை மே மாதம்  அறிமுகம் செய்ய  உள்ளது.

அப்துல் ஹமீத் ஹுசேன், நகராண்மை கழக தலைவர் கூறுகையில், இந்தப்  புதிய திட்டம் கார் நிறுத்துமிட கூப்பன் சேவையை மேம்படுத்தும் என்றார்.

 

எம்பிஎஜே தற்போது புதிய முறையிலான கார் நிறுத்துமிட சேவை நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் பணியில் இருப்பதாக கூறினார்.

இந்த விவேக முறையிலான சேவை மாநில அரசாங்கத்தின் “ஸ்மார்ட் சிலாங்கூர்” அச்சாரத்தின் தொடர்ச்சி  எனவும் என்று தெரிவித்தார்.

ydp-mpaj-abd-hamid-hussain

 

 

 

 

 

 

 

 

தற்போது  எம்பிஎஜே கார் நிறுத்துமிட கூப்பன்களை நேரிடையாக விநியோகம் செய்வதாக கூறினார்.

இந்த விவேக சமுதாயத் திட்டம் (ஐசிஓஎம்எம்) மக்கள் சுலபமாக லைசென்சு புதிப்பிப்பது, மண்டபம் பயன்பாடு, கடைகள் வாடகை, வரிகள் மற்றும் அனைத்து சேவைகளும் சென்றடைய ஆவன செய்கிறது.

தொடர்ந்து அவர் பேசுகையில், எம்பிஎஜே மக்களின் பல்வேறு வசதிகளை மேம்படுத்த ஆய்வு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், இது நீண்டகால  அடிப்படையில் மக்களுக்கு பயன்படும்  என்று கூறினார். குறிப்பாக  எம்பிஎஜே அரங்கம் ரிம17 மில்லியன் அளவில் மிகப் பெரிய மண்டபமும் சேர்ந்து கட்டப்பட்டுள்ளது என்று பிலாமிங்கோ தங்கும் விடுதியில் நடைபெற்ற  சிறப்புச் சேவைக்கான நிகழ்வில் தெரிவித்தார்.

 

-கெஜிஎஸ்-

-nR-


Pengarang :