NATIONAL

சம்சுல் இஸ்கண்டர்: மலாக்கா முதலமைச்சர் ரிம150 மில்லியன் ஊழல் செய்த அம்னோ தலைவரை மறைக்கப் பார்க்கிறார்

ஷா ஆலம், 27 ஏப்ரல்: ஊழல் தடுப்பு ஆணையம் தொடர்ந்து ரிம150 மில்லியன் ஊழல் செய்த அம்னோ தலைவரை கைது செய்யாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும் முக்கிய புள்ளி  இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கெஅடிலானின் உதவித் தலைவர் சம்சுல் இஸ்கண்டர் கூறுகையில், இந்த மலாக்கா  அம்னோ தலைவர் கைது ஆணை பிறப்பித்துள்ளது ஆனால் கைது செய்யப் படாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.

” கைது ஆணை பிறப்பித்தும் சுதந்திரமாக  எப்படி  இருக்க முடியும்? அதிகாரிகள் கைது செய்ய முடியாத எந்த இடத்தில் இந்த தலைவர்  இருக்கிறார்?

shamsul-iskandar-mohd-akin

 

 

 

 

 

 

” இவர் மலாக்கா முதலமைச்சருடன் நேரடி தொடர்பு உள்ளவர் ஆகையால் மறைத்து வைத்திருக்கிறார்களா? இந்த  ஊழலில்  இட்ரிஸ் ஹருனுக்கும் தொடர்பு உள்ளதா?” என்று கேள்வி எழுப்பினார்.

கடந்த நவம்பரில் ஊழல் தடுப்பு ஆணையம் ரிம150 மில்லியன் பணமாகவும், சொகுசு கார்கள், சொத்துடமை மற்றும் பல ஆவணங்களும் சேர்த்து  அந்த நபரிடம் இருந்து கைப்பற்றினர்.

இந்த வழக்கு டத்தோ  இட்ரிஸ் ஹருன் தலைமையேற்றிருக்கும் மலாக்கா மாநில அரசாங்கத்தோடு தொடர்பு படுத்திப் பேசப்படுகிறது.

 

சம்பந்தப்பட்ட நபர் ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை தொடங்கியதும்  வேலையில் இருந்து  இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்றும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், தற்போது தங்கா பாத்து அம்னோ தொகுதி சேவை மையத்தில் பணியமர்த்தப்பட்டிருப்பதாக உள்ளூர் தகவல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆகவே, சம்சுல்  ஊழல் தடுப்பு ஆணையத்தை இந்த நபரை கைது செய்யாமல் இருப்பதை விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த  ஊழல் வழக்கில் யாரும் மூடி மறைக்கக் கூடாது என்று தெரிவித்தார்.

 


Pengarang :