PBTSELANGOR

சட்டவிரோத குப்பைகளை வீசுவோர் பற்றிய தகவல் தருவோருக்கு ரிம100

ஷா ஆலம், மே9:

கோலா லங்காட் மாவட்ட மன்றம் (எம்டிகெஎல்) சட்டவிரோத  குப்பைகளை வீசுவோர்  பற்றிய தகவல் தரும் பொது மக்களுக்கு ரிம 100 சன்மானம் வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

அதன் தலைவர், முகமட் ஸைன் ஏ ஹாமிட் கூறுகையில், இந்நடவடிக்கையானது குப்பை பிரச்சனை எதிர் கொள்ள நடத்தும் முயற்சி என்றும் குறிப்பிட்டார். இப்பிரச்சினை கோலா லங்காட் மாவட்டத்தின் நற்பெயரை கெடுக்கிறது.

மேலும் கூறுகையில், புகார் செய்வோர் அதன் முழு விவரங்களை பாரங்கள் மூலம் பூர்த்தி செய்து மைகார்ட் நகலையும் இணைக்க வேண்டும் என்றும் அவர்கள் நீதி மன்றத்தில் சாட்சியம்  அளிக்கவும் வர நேரிடும் என்று தெரிவித்தார்.

” புகார்களை சம்பந்தப்பட்ட படங்களோடு, இடம், திகதி, நேரம் ஆகியவற்றோடு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர்களின் வாகனங்களின் பதிவு  எண் சேர்த்து கொடுக்க வேண்டும். மேற்கண்ட அனைத்து விபரங்களையும் கொண்டு கொடுப்பவர்களின் புகாரின் அடிப்படையில் உண்மை நிலையை  அறிந்து இந்த சன்மானம் மலேசியருக்கு மட்டுமே வழங்கப்படும்,” என்று முகமட் ஸைன் கூறினார்.

 


Pengarang :