MEDIA STATEMENT

ஊராட்சி மன்றங்களின் திட்டங்கள் ரத்துசெய்தது, மத்திய அரசாங்கத்திடம் பணம் இல்லையா?

நகர நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி துறை  அமைச்சர் டான்ஸ்ரீ நோ ஒமார் தன் அமைச்சின் கீழ் கடந்த  ஒரு வருடமாக ஊராட்சி மன்ற மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு எல்லா 222 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் போதாது என்ற கூற்றை மேற்கோள்காட்டி குவாந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபுஸியா சாலே தெரிவித்தார்.

இதை முன்னிட்டு, கடந்த தேர்தலில் தேசிய முன்னணி வென்ற நாடாளுமன்ற சட்ட மன்ற  இடங்களில் மட்டுமே மேம்பாட்டு திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று நோ ஒமார்  தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற  இடங்களில்  ஒதுக்கப்பட்ட மேம்பாட்டு திட்டங்களை ரத்துசெய்தது மத்திய அரசாங்கம் எந்த திட்டங்களை மேற்கொள்ள நிதி பற்றாக்குறை எதிர் நோக்கும் சூழ்நிலையை காட்டுகிறது. ஆக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில்  அதிகமான வருமானம் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியினால் ஏற்பட்டுள்ளது என்ற கூற்று மக்களை திசை திருப்பவே அரசாங்கம் முயல்கிறது.

இந்த நிலையை காரணம் காட்டி ஊராட்சி மன்ற சிறிய மேம்பாட்டு திட்டங்களில் பாரபட்சம் காட்ட நோ ஒமாருக்கு உரிமை  இல்லை ஏனெனில் செலவு செய்யும் நிதி மக்களிடையே வசூலித்த வரிபணமே ஆகும்.  ஆகவே அரசாங்கத் திட்டங்கள்  அரசியல்ரீதியாக பார்க்கும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படி நோ ஒமார் தொடர்ந்து இச்செயலில் ஈடுபட்டார் எனில் அவர்  எதிர்க்கட்சிகளின் வாக்காளர்களை மட்டும் தண்டிக்கவில்லை மாறாக அப்பகுதியில் தேசிய முன்னணிக்கு ஓட்டுப் போட்ட வாக்காளர்களையும் சேர்த்து தண்டிப்பதாகவே உள்ளது என்று தெரிவித்தார்.

Fuziah-SallehSaya melihat di Parlimen Kuantan, sebagai contoh di Taman Gelora, kerajaan tidak dapat mengekalkan kemudahan asas seperti memotong pokok-pokok tua serta membaikpulih kemudahan sukan dan rekreasi. Kawasan ini merupakan tempat riadah terutama penduduk di sekitar Kuantan, kerana berhampiran dengan pantai.

இறுதியாக, மக்கள் நஜிப் நிர்வாகத்தில் கீழ் மற்றும்  அம்னோ பிஎன் அரசாங்க அமைச்சர்கள் செய்யும் இமாலய தவறுகளால் பெரும் சுமைகளை எதிர் நோக்கி வருகிறார்கள். இதில் அண்மையில் நடக்கும்  அம்னோ பிஎன் அரசாங்கத்தின் மோசமான நடவடிக்கைகள்  ஆகும். பணக்காரர்கள் தொடர்ந்து எந்த தவறும் செய்யலாம், ஆனால் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்றும் குறிப்பாக  அம்னோ பிஎன் அரசாங்க அமைச்சர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பது  பார்க்கும் போது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.

ஃபுஸியா சாலே

குவாந்தான் நாடாளுமன்ற உறுப்பினர்

*Fuziah Salleh adalah Ahli Parlimen Kuantan


Pengarang :