SUKANKINI

சிலாங்கூர் கால்பந்து சங்கம் மாநில அரசாங்கத்தை இழிவுபடுத்தும் செயலை நிறுத்திக் கொள்ளவும்

ஷா ஆலம், 30 ஏப்ரல்:

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை மோசமான நிலையில் இழிவுபடுத்தும் சிலாங்கூர் கால்பந்து சங்கத்திற்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மாநில  இளையோர் மேம்பாடு, விளையாட்டு, பண்பாடு மற்றும் தொழில் முனைவர் மேம்பாடு ஆட்சிக் குழு உறுப்பினர்  அமிருடின் ஷாரி தெரிவிக்கையில், கால்பந்து விளையாட்டில் சிலாங்கூர் மறுமலர்ச்சி பெற இது வரை மிக நேர்த்தியாக முயற்சிகளை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.

மேலும் கூறுகையில், அப்படி மாநில அரசாங்க அலுவலகத்தின்  (எஸ்யுகே) திடலை “ரேட் ஜயன்ஸ்” தங்களின் பயிற்சிக்கு பயன்படுத்தவில்லை என்றால் மாநில அரசாங்கத்திற்கு மகிழ்ச்சிதான் என்றார்.

PADANG SUK

 

 

 

 

 

” இந்த திடலை மீண்டும் எடுப்பதில் எங்களுக்கு மிக மகிழ்ச்சி தான். அவர்கள்  எங்களிடம் திரும்பி ஒப்படைத்ததால் இதனால் பிரச்சனை  ஏதும் இல்லை. சிலாங்கூர் கால்பந்து சங்கம் வேறு திடலை விளையாட்டாளர்களுக்கு ஏதுவாக தேர்வு செய்யலாம்,” என்று கூறினார்

” இதற்கு முன்பு மாநில அரசாங்கம் மிக நேர்த்தியான முறையில் செய்தது, அவர்களுக்கு நாம்  அழுத்தம் கொடுக்கவில்லை, பெரிய அளவில் மாற்றங்களையும்  எதிர் பார்க்கவில்லை,” என்று தெளிவாக விளக்கினார்.

அமிருடின் எஸ்யுகே திடல் சிலாங்கூர் கால்பந்து சங்கம் நிர்வாகம் செய்யும் திடல் என்றும் மாநில அரசாங்கம் அல்ல என்று நினைவு கூர்ந்தார்.

” இந்தத் திடல் தரமாக  இல்லை  என்றால் அது சிலாங்கூர் கால்பந்து சங்கத்தினரால் பராமரிக்கப்பட்டு வந்ததுதானே? அப்படி கால்பந்து சங்கத்திற்கு  உகந்ததாக இல்லாமல் போனால் மாநில அரசாங்கம் மீண்டும் நிர்வகிக்க தயாராக இருக்கிறது. நாம் மற்ற சங்கங்களுக்கு கொடுக்கலாம்  அல்லது கால்பந்து மேம்பாட்டு மையமாகவும் பயன்படுத்தலாம்,” என்று கூறினார்

இந்நிலையில், சிலாங்கூர் கால்பந்து சங்கத்தினரால் ஏற்பட்ட சிக்கல் தேசிய முன்னணியுடன் நெருங்கிய ஒரு தனிப்பட்ட மனிதனின் சித்து விளையாட்டு என்று தெரிவித்தார்.

YB AMIR

 

 

 

 

 

 

” நாங்கள்  கால்பந்து விளையாட்டை அரசியல் ஆக்குகிறோம் என்று குற்றம் சாட்டுகின்றனர். டத்தோ ஸ்ரீ சுபஹான் கமாலை கேட்கிறேன் யார் இதை  அரசியல் ஆக்கியது? கால்பந்தின் எதிர்காலத்திற்கு சரியான போட்டியிடும் திறன் கொண்ட மற்றும் நீண்டகால திட்டங்களை நிர்வகிக்கும் குழுவை மாநில அரசாங்கம் தேர்வு செய்யும். நாம் ஒரு முறை மட்டும் கிண்ணத்தை வெல்ல  எண்ணத்தை கொள்ளவில்லை மாறாக நீண்டகால அடிப்படையில் வெற்றி பெற வேண்டும் ,” என்று கூறினார்.

 


Pengarang :