NATIONAL

பாக்காத்தான் பொது மக்களை புதிய சின்னத்தை உருவாக்க வரவேற்கிறது

ஷா ஆலம், மே 4:

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தங்களின் புதிய சின்னத்தின் மீது   பொது மக்களின் பரிந்துரைகளையும் ஆர்வத்தையும் வரவேற்கிறது. இதையடுத்து தனது  ஊடகச் செய்தியில் பாக்காத்தான் பொது மக்கள் அனைவரையும் புதிய சின்னத்தை உருவாக்க பரிந்துரைகள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறது.

”   மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகு பாக்காத்தான் தலைவர்கள், மேலும் பொது மக்களின் பரிந்துரைகளும் வடிவமைப்புகளும் அடிப்படையாகக் கொண்டு  ஒரு சின்னம்  உருவாக்கப் படும்,” என்று தெரிவித்துள்ளது.

பொது மக்கள் குறிப்பாக, இணையதளத பயனீட்டாளர்கள் பாக்காத்தான் சின்னத்தை பற்றி நேர்மறையான கருத்து கூறுவதை வரவேற்கிறது என்று விவரித்து கூறியது.

 

சில வரையறைகள் பரிந்துரைக் பட்டுள்ளது:

1. குறைந்த பட்சம் இரண்டு வண்ணங்களில் இருக்க வேண்டும்,     வாக்குச் சீட்டில் காட்டுவதற்கு  ஏதுவாக  கருப்பு வெள்ளை வண்ணத்திலும் இருக்க வேண்டும்.

2. சின்னம் சுலபமாக  அடையாளம் காணும் அளவில்  இருக்க வேண்டும்.

3. சின்னம் நம்பிக்கை, மக்களாட்சி, நீதி, ஒருமைப்பாடு மற்றும் நேர்மை போன்ற அம்சங்கள்  அடங்கியதாக  இருக்க வேண்டும்.

4. சின்னம் சுலபமாக அடையாளம் காணும் வகையில் சிறிய தோற்றத்திலும்  (சட்டையில் பொறிக்க) மற்றும் பெரிய அளவிலும்  ( கொடி அளவில்) இருக்க வேண்டும்.

இந்த சின்னத்தை வரைவோர் ‘அவுட்லைன் வெக்டர்’ மற்றும்  எடோப் இலுஸ்டிரேதோர் வடிவிலே  இருக்க வேண்டும்.

பொது மக்கள் தங்கள் வரைந்த சின்னங்களை [email protected] -க்கு இன்றிலிருந்து மே 9 வரை அனுப்பலாம். மேலும்  உங்களின் மைகார்ட் எண்ணெய் மற்றும் தொலைபேசி எண்ணையும் குறிப்பிட வேண்டும்.

ஏற்பாட்டாளர்கள் தேர்வு செய்த சின்னத்தில் மாற்றங்கள் செய்ய உரிமை உண்டு என்றும் விவரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Pengarang :