SELANGOR

கிள்ளானில் வெள்ளம் வராமல் தடுக்க உடனடி தீர்வு

கிள்ளான், மே 4:

கிள்ளான் வட்டாரத்தில்  உள்ள கிள்ளான் உத்தாமா, சுங்கை பத்து சாலை பகுதியில் கடந்த இரண்டு ஆண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் வெள்ளப் பிரச்சனையை  களைய வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்.

காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. மணிவண்ணன் கூறுகையில், இப்பகுதியில் நிலவும் வெள்ளப் பிரச்சனை தொடர்ந்து நடந்து வருகிறது என்றும் நீர் தேக்கி குளங்கள்  அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த போதும் இன்னும் கட்டி முடிக்கப் படாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் கூறுகையில், நீர் தேக்கி குளம் மற்றும் வெள்ள கண்காணிப்பு திட்டம் மேம்பாட்டு பணிகள் 30 மார்ச் மாதம் முழுமை பெறும் என்றாலும் இன்று வரை செய்து முடிக்கவில்லை.

”   வெள்ளம் மற்றும் நீர் தேக்கி குளப் பிரச்சனையின் காரணமாக கிள்ளான் உத்தாமா பகுதியில் கடந்த 12 நவம்பர் 2015-இல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து 16 நவம்பர் 2015-இல் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியை சந்தித்த பிறகு  அவர் தாமான் கிள்ளான் உத்தாமா பகுதியில்  ஒரு நீர் தேக்கி குளம் கட்டி தருவதாக கூறினார். மாநில அரசாங்கமும் இதற்காக ரிம 600,000 மற்றும் ஜெர்மன் நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட சிறப்பு பம்ப் செட் ரிம 200,000 ஒதுக்கீடு செய்தது,” என்று மணிவண்ணன் கூறினார்.

IMG_3657

 

 

“Lubang aliran air di kawasan persekitaran juga wajar ditutup kerana air mengalir ke luar dari lubang ini dan memasuki kawasan perumahan,” katanya.


Pengarang :