NATIONAL

பாரபட்சம் வேண்டாம், தேர்தல் ஆணையம் நேர்மையான வழியில் தேர்தலை நடத்த வேண்டும்

ஷா ஆலம், மே 5:

மலேசிய தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்) நடுநிலையான போக்கை கடைபிடிக்க வேண்டும் எனவும் தொழில் ரீதியில் மற்றும் நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும். மேலும் யாரையும் சார்ந்து இருக்காமலும் எந்த  அரசியல் கட்சிகளின் நலன்களை பாதுகாக்கவும் பணியாற்றக் கூடாது என்று கெஅடிலான் கட்சியின் இளைஞர் பிரிவு உதவித் தலைவர் தான் கா ஹெங் கூறினார்.

மேலும் விவரிக்கையில் மக்களாட்சி தத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் பொறுப்புள்ள ஒரு ஆணையமாக  இருக்கவும் நியாயமான தேர்தல் நடத்த வேண்டும் என்றார்.

”   எஸ்பிஆர் பொறுப்புள்ள ஒரு அரசாங்க நிறுவனமாக நடந்து கொள்வதுடன் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

Tan Kar Hing

 

 

 

 

 

கூடுதல் வாக்காளர் பட்டியல் விநியோகத் தடையை விதித்த தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை தொட்டு இவர் கருத்து கூறினார். சிம்பாங் பூலாய் சட்ட மன்ற உறுப்பினருமான தான் கா ஹெங் கூறுகையில் தேர்தல் ஆணையம் மாற்றான் தாய் போன்று எதிர்க்கட்சிகளை நடத்தி வருகிறதுஎன்று தெரிவித்தார். எஸ்பிஆர் 2013-இல் இருந்து தனது நடவடிக்கைகளின் வழி ஒரு சார்பாகவே நடந்து வருவதை பொது மக்கள் அனைவரும் அறிந்ததே என்று விவரித்தார்.

 


Pengarang :