RENCANA PILIHANSELANGOR

அரசாங்க ஊழியர்களின் சிறந்த சேவை மாநில அரசாங்கத்தின் நிலைத்தன்மைக்கு அடித்தளம்

ஷா ஆலம், மே 9:

சிலாங்கூரில் பணி புரியும் பொதுச் சேவை ஊழியர்களின் சிறந்த அடைவு நிலை மாநில பொருளாதார நிலைத்தன்மையை மேம்படுத்தி அனைத்துலக ரீதியில்  மாநிலத்தை உயர்த்தும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். பொதுச் சேவை ஊழியர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வதுடன் நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாக செயல்பாடுகளை முன்நிறுத்தி மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து அவர்களின் பணிகளில் உறுதிப்பாடு கொண்டு செயல்படும் பொழுது மாநில பொருளாதார நிலைத்தன்மை சரியான பாதையில் செல்ல வழி வகுக்கும் என்று தெரிவித்தார்.

” நான்  எப்போதும், அரசாங்க ஊழியர்களை எந்த ஒரு தனி நபரையும் ஆதரிக்க வேண்டாம் எனவும் பொதுச் சேவை வழிமுறையை பின்பற்றி சேவை ஆற்ற வேண்டும். இந்த நடவடிக்கையை எல்லோரும் பின்பற்றினால் சிலாங்கூர் மாநில அரசாங்க ஊழியர்களின் செயலாக்கம் சிறந்து விளங்கும். இது நான் வெளிநாட்டு வேலை நிமித்தம் பயணித்த போது வெளியிட்ட கருத்தாகும்,” என்று கூறினார்

மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி 2017-இல் சிறந்த சேவையாளர் விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது கூறினார்.


Pengarang :