NATIONAL

பாக்காத்தான் சின்னத்தை உருவாக்கும் போட்டியில் 317 விண்ணப்பங்கள் குவிந்தது

பெட்டாலிங் ஜெயா, மே 9:

இதுவரையில் பொது மக்களிடம் இருந்து 317 பாக்காத்தான் ஹாராப்பான் சின்ன விண்ணப்பங்களை பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் தலைமைச் செயலாளர் டத்தோ சைபூடின் அப்துல்லா கூறுகையில், பாக்காத்தான் இந்த விண்ணப்பங்களை ஆராய்ந்து மிக விரைவில் சின்னத்தை தேர்ந்தெடுத்த பிறகு  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவோம்.

”   இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. 16 வயது முதல் 80 வயது முதியவர் வரை விண்ணப்பம் செய்துள்ளனர்,” என்று பெர்சத்து கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இதனிடையே கெஅடிலான் கட்சியின் தொடர்புக் குழு தலைவர் ஃபாமி ஃபாஸில் கூறுகையில் பல்வேறு விதங்களில் விண்ணப்பம் செய்துள்ளதாகவும் கூறினார்.

இதனிடையே பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி, தனது நடவடிக்கைகளை எல்லா நிலைகளிலும் உள்ள  அரசு சார்பற்ற இயக்கங்கள் வழி கருத்துக்களை கேட்டறிந்து வருவதாகவும் தெரிவித்தார். இந்த கூட்டமைப்பு பாக்காத்தான் வரைய இருக்கும் தேர்தல் வாக்குறுதி செயலாக்கதிற்கு பெரிதும் உதவும் என்று கூறினார்.


Pengarang :