SELANGOR

‘வேக்ஸ்17’ கண்காட்சி யுனிசெல் மாணவர்களை தொழிற்துறையில் ஈடுபட ஊக்குவிக்கும்

ஷா ஆலம், மே 11:

சிலாங்கூர் பல்கலைக்கழக (யுனிசெல்) மாணவர்களின்  உற்பத்தி செயல்பாடுகளை ‘வேக்ஸ் 17’ கண்காட்சியில் வெளிக்கொணரும் பொழுது  அவர்களின் திறமைகளை சந்தைக்கு ஏற்ப உருமாற்றம் செய்ய முடியும். பெரித்தா ஹாரியான் குழுமத்தின் ஆசிரியர், முஸ்தபா மாபஃர் அலி கூறுகையில், இந்த நடவடிக்கை மாணவர்களின் சிந்தனைகள் மற்றும் திறமைகள் கிராபிக்ஸ் மற்றும் புகைப்படத் துறைகளில் மிளிரும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்றார். மாணவர்களின் வேலைப்பாடுகள் வெளிக்கொணரும் முயற்சிகள் அவர்களின் வேலை வாய்ப்பை உருவாக்கும். யுனிசெல்லின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதுடன் இந்த நாட்டில் கலையை வளர்க்கும் நடவடிக்கைகளை செயல்படுத்தும் விதத்தை பாராட்டுவதாக கூறினார்.

இந்த நிகழ்வில் யுனிசெல்லின் இணை துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் மொக்தார் அப்துல்லா மற்றும் தொடர்புத் துறை, காட்சி கலை மற்றும் கணினிவள பிரிவின் தலைவர் பேராசிரியர் முனைவர் அஸ்மூடின் இப்ராஹிம் கலந்து கொண்டனர்.


Pengarang :