SELANGOR

நோ ஒமார், மாநில நிர்வாகத்தில் தலையீடு வேண்டாம்

பெட்டாலிங் ஜெயா, மே 11:

சிலாங்கூர்  அம்னோவின் தலைவர் டான்ஸ்ரீ நோ ஒமார் மாநில நிர்வாகத்தில் தலையீட்டை நிறுத்துமாறும் மற்றும் பல்வேறு முரண்பாடான செய்திகளை வெளியிட்டு வருவதை நிறுத்துமாறு மாநில ஆட்சிக் குழு  உறுப்பினர் டத்தோ தேங் சாங் கிம்   நினைவுறித்தனார். இதை தவிர்த்து, நோ ஒமார் எந்த நேரத்திலும் நடக்கலாம் என்று எதிர் பார்க்கும் பொதுத் தேர்தலில் மாநில அம்னோவின் தேர்தல் பணிகளை மேற்கொண்டு கட்சியின் நிலையை நினைத்து கவலைப் பட வேண்டும் என்றார்.

”   நோ அம்னோ தேசிய முன்னணியின் தற்போதைய சூழ்நிலையை புரிந்து கவலைப் பட வேண்டும். நோவின் பதவியும் அந்தரத்தில் மிதக்கும் நிலையில், அவர் தொடர்ந்து தனது வேலையில் கவனம் செலுத்த வேண்டும்,” என்று சிலாங்கூர் அனைத்துலக வாணிப உச்ச மாநாடு  தொடக்க விழாவிற்கு பின் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

தஞ்சோங் காராங் நாடாளுமன்ற உறுப்பினருமான நோ ஒமார் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீமுகமட் அஸ்மின் அலியின் தலைமைத்துவத்தை சிறுமைப்படுத்தி பேசியதை மேற்கோள்காட்டி தேங் சாடினார்.


Pengarang :