SELANGOR

மே 18, கிள்ளான் வட்டாரத்தில் சில இடங்களில் குடிநீர் தடங்கல் ஏற்படும்

ஷா ஆலம், மே 12:

எதிர் வரும் மே 18-இல், காலை மணி 8 இருந்து  இரவு மணி 12 வரை கிள்ளான் வட்டாரத்தில் சில இடங்களில் தற்காலிகமாக குடிநீர் தடங்கல் ஏற்படும் என்று சிலாங்கூர் குடிநீர் விநியோக நிறுவனமான (ஷாபாஸ்) அறிவித்துள்ளது. நோர்த் ஹம்ஹோக் சமநிலை தொட்டி, சுத்தம் செய்யும் மற்றும் மேம்படுத்தும்   பணிகளினால் இந்த தடங்கல் ஏற்படுவதாகவும் கூறியது.

மேற்கண்ட நடவடிக்கைகள் தரமான குடிநீர் விநியோகம் செய்ய பட்டியல் இடப்பட்ட பராமரிக்கும் பணிகள் ஆகும்.

ஜாலான் மேரு தொழில் பேட்டை, தாமான் மேரு  உத்தாமா, தாமான் மெஸ்ரா மேரு, மேரு நகர், மேரு நகர் 2, தாமான் பாயூ மேரு மற்றும் தாமான் டாயா மாஜூ ஆகிய பகுதிகள் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் இடங்களாகும் என்று ஷாபாஸ் அறிவித்துள்ளது.


Pengarang :