SELANGOR

மந்திரி பெசார்: மக்களின் தீர்ப்புக்கு ஏற்ப 3 பாஸ் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் தொடர்ந்து பதவி வகிப்பர்

ரவாங், மே 12:

பாஸ் கட்சியின் மூன்று ஆட்சிக் குழு உறுப்பினர்கள், கெஅடிலான் உடன் உறவு முற்றுபெற்றதாக பாஸ் ஷுரா உலாமாக் பேரவை அறிவித்தாலும் தொடர்ந்து மாநிலஅரசாங்கத்தில் அங்கம் வகிப்பார்கள் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். தற்போதைய மாநில அரசாங்கத்தின் ஆட்சிக் குழு எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தல் வரை மாநில நிர்வாகத்தை நடத்திச் செல்லும் என்று விவரித்தார்.

”   நாங்கள் 13-வது பொதுத் தேர்தலில் மக்களின் தீர்ப்பை மதிக்கிறோம், ஆக சிலாங்கூர் மாநில 3 பாஸ் கட்சி ஆட்சிக் குழு உறுப்பினர்கள் தொடர்ந்து நீடிப்பார்கள். இதற்கு முன் நான் கூறியது போல, இந்த முடிவு பல முயற்சிகளுக்கு பிறகு எடுக்கப்பட்டது,” என்று கூறினார்.

AZMIN

 

 

 

 

 

நேற்று, பாஸ் கட்சியின் ஷுரா உலாமாக் பேரவை கெஅடிலான் கட்சி உடனான நீண்டகால  உறவை துண்டிப்பதாக  அறிவித்துள்ளது. ஆனால், இந்த நடவடிக்கை சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை பாதிக்கவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.

பாஸ் கட்சியின் டத்தோ இஸ்கண்டர் அப்துல் சமத், டத்தோ  அமாட் யூனுஸ் ஹய்ரி மற்றும் ஜைடி அப்துல் தாலிப் ஆகியோர் இந்த மூன்று ஆட்சிக் குழு உறுப்பினர்கள் ஆவர். ஆனாலும், முகமட் அஸ்மின் அலி மாநில பாஸ் கட்சியின் தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட மூன்று ஆட்சிக் குழு உறுப்பினர்களையும் நேற்று சந்தித்து விட்டதாக தெரிவித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு தான் கெஅடிலான் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயிலை சந்திக்கவிருப்பதாக கூறினார்.

இதனிடையே, இன்று காலை வான் அஸிஸா டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் சிலாங்கூர் மாநில அரசாங்கம் எப்போதும் போல பலத்துடன் மக்களின் வளத்திற்கு மற்றும் மாநில மேம்பாட்டுக்கும் தொடர்ந்து பாடுபடும்  என்று கூறினார்.


Pengarang :