SELANGOR

செகிஞ்சான் சந்தையை மேம்படுத்தும் பணிகளை முறையாக கண்காணிக்க வேண்டும்

ஷா ஆலம், மே 15:

செகிஞ்சான் சட்ட மன்ற உறுப்பினர் எங் சியூ லிம் செகிஞ்சான் சந்தை மேம்படுத்தும் பணிகளை நேரிடையாக கண்காணிப்பு செய்யப் போவதாக அறிவித்தார். தேசிய முன்னணியின் சுங்கை பெசார் இடைத்தேர்தல் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று என்று கூறினார். தேர்தலில் போது  இனிப்பான வாக்குறுதிகளை அள்ளி வழங்கிவிட்டு இன்று வரை மேம்பாட்டு பணிகள் எதுவும் ஆரம்பிக்கவில்லை என்று விவரித்தார்

”   நான் தொடர்ந்து இந்த திட்டத்தை கண்காணிக்க போகிறேன். வரையறைகளை பின்பற்றி இருப்பதையும் மற்றும் நோன்பு மாதத்தில் வியாபாரிகளுக்கு இடையூறாக இல்லாமலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

மேலும் அவர் ரிம 500,00 செலவில் சீரமைப்பு பணிகள் பொது மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் எனவும் சுற்றுப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இருப்பது அவசியம் என்று   கூறியுள்ளார். ஆகவே அனைத்து பொது மக்களும் மற்றும் வியாபாரிகளும் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும் என்றார்.

 


Pengarang :