SELANGOR

தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப, சிலாங்கூர் திறன் மிக்க தொழிலாளர்களை உருவாக்கும்

ஷா ஆலம், மே 17:

மாநில அரசாங்கம் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப திறன் மிக்க இளையோர்களை உருவாக்கும் என்று மாநில கல்வி, மனித மூலதன மேம்பாடு, அறிவியல், தொழில் நுட்பம் மற்றும்  கண்டுபிடிப்பு ஆட்சிக் குழு உறுப்பினர், நிக் நஸ்மி நிக் அமாட் கூறினார். இந்த உறுதியான நிலைப்பாடு தொடர்ச்சியான சிறந்த கல்வி கொள்கை கொண்ட மாநில அரசாங்கத்தின்  கல்வி நிறுவனங்களின் மூலம் வெற்றி பெறுகிறது என்றார்.

”   மாநில அரசாங்கம் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப திறன் மிக்க இளையோர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கை எடுக்க காரணம், 3.3 மில்லியன் தொழில் திறன் கொண்ட தொழிலாளர்கள் 2020-குள் தேவைப்படும். ஆகவே நாம் கல்வித்துறை மற்றும் தொழில் நுட்ப பயிற்சி அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளை காட்டிலும் நமது நாட்டில் பின்தங்கிய நிலையில் இருப்பதாக ஒத்துக் கொள்ள வேண்டும். இந்த நிலை ஏற்பட முக்கிய காரணம் நமது சமுதாயம் கல்வி தேர்ச்சியில் மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் மாறாக தொழில் திறன் பயிற்சியில் நாட்டம் இல்லை,” என்று விவரித்தார்.

INPENS2

 

 

 

 

 

இன்ஸ்பென்ஸ் அனைத்துலக கல்லூரி, மாநில அரசாங்கத்தின் கீழ் செயல்படும் ஒரு நிறுவனம் ஆகும். இன்ஸ்பென்ஸ் கல்லூரி எஸ்பிஎம் முடித்த மாணவர்களுக்கு தொழில் திறன் பயிற்சி வழங்குவதில் முழு கவனத்தை செலுத்தி வருகிறது என்றால் மிகையாகாது.


Pengarang :