NATIONAL

எம்எஸ்எம் சீனி விலையை நிலை நிறுத்தியது

கோலாலம்பூர், மே 25:

மலேசியாவின் மிகப் பெரிய சீனி உற்பத்தியாளரான, எம்எஸ்எம் மலேசியா ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் அரசாங்கத்தின் சீனி விலையை ஏற்றக்கூடாது என்ற முடிவை ஏற்றுக் கொண்டுள்ளது. சீனிச் சந்தையில் 60% மொத்த உற்பத்தியில் எம்எஸ்எம் பங்கு வகிக்கிறது குறிப்பிடத்தக்கது.

”   பொது மக்கள் எம்எஸ்எம் நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்து, சீனி விநியோகம் தொடர்ந்து நாட்டில் தடையின்றி இருக்கும் என்றும் குறிப்பாக எதிர் வரும் நோன்பு பெருநாள் முன்னிட்டு சீனி தட்டுப்பாடு ஏற்படாது,” என்று பெர்னாமாவிடம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்த நிறுவனம், உலக நாடுகளில் சீனி விலை படிப்படியாக குறைந்து வந்தாலும் உற்பத்தி செய்யும் நடைமுறை செலவீனங்கள் அதிகரித்து வருவதால் சீனியின் சந்தை சீராக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்எஸ்எம் பெல்டா குலோபல் வென்ட்ச்ர் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனத்தின் துணை நிறுவனம், மலேசியாவில் பிரபலமான பிறை சீனியின் உற்பத்தியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

*பெர்னாமாவின்  செய்தி


Pengarang :