NATIONAL

பாக்காத்தான் சின்னம் ஜூன் 9, அறிவிக்கப்படும்

ஷா ஆலம், ஜூன் 1:

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் ஒருங்கிணைந்த சின்னம் 14வது பொதுத் தேர்தலை முன்னிட்டு எதிர் வரும் ஜூன் 9-இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று பெர்சத்து கட்சியின் ஆலோசகர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். அதிகாரப்பூர்வ சின்னத்தில் ஹாராப்பான் வார்த்தை நிலைநிறுத்தி மற்ற சிறு உருமாற்றம் செய்யப்பபட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டினார்.

”   நாங்கள் இந்த சின்னத்திற்கு அனுமதி அளித்து விட்டோம்,” என்று பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தலைமைத்துவ கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் கூட்டத்தில் பேசினார். இக்கூட்டத்தில் கெஅடிலான் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில்; அமானா கட்சியின் தலைவர் மாட் சாபு; ஜசெகவின் ஆலோசகர் லிம் கிட் சியாங் மற்றும் பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் உடன் இருந்தனர்.

இதனிடையே, அமானா கட்சியின் தொடர்பு குழு இயக்குனர், காலிட் அப்துல் சமத் கூறுகையில் எதிர் வரும் ஜூலை மாதத்திற்குள் தொகுதி பங்கீடு முடிந்துவிடும் என்று உறுதி படுத்தினார். இந்த கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகள், தொகுதி பங்கீடு, சின்னம் மற்றும் மற்ற பல 14வது பொதுத் தேர்தல் சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பாக பேசப்பட்டது என்று கூறினார்.


Pengarang :