RENCANA PILIHANSELANGOR

பெடுலி சேஹாட், 2017-இன் முதல் கால் ஆண்டிற்கான பதிவு இலக்கை தாண்டியது

ஷா ஆலம், மே 1:

ஏறக்குறைய 200,000 பேர்கள் பெடுலி சேஹாட் திட்டத்தின் வழி பதிந்து கொண்டதாகவும் கடந்த மே 30 2017 வரை முதல் கால் ஆண்டிற்கான   இலக்கான 50,000-தை தாண்டியது குறிப்பிடத்தக்கது. செல்கேட் குழுமத்தின் தலைமை செயல் நிர்வாகியான, நூர் ஹிஷாம் கூறுகையில், ஒவ்வொரு மாதமும் தங்களின் பதிவு உயர்ந்த நிலையில் இருப்பதாக கூறினார். இந்த வெற்றி மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு மற்றும் சில அரசு சார்பற்ற இயக்கங்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளே காரணம் என்று உறுதி படுத்தினார். மாநில ரீதியாக 30 பிரச்சாரங்கள் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு மற்றும் சில அரசு சார்பற்ற இயக்கங்களின் ஒத்துழைப்போடு நடத்தப்பட்டு பொது மக்களின் அமோக ஆதரவை பெற்றது என்று கூறினார்.

170410 peduli sihat-01

மேலும் கூறுகையில், ஒரு மில்லியன் இலக்கை கண்டிப்பாக பெடுலி சேஹாட் சுகாதார அட்டை திட்டம் எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மாநில அரசாங்கம் இந்த நடவடிக்கையின் மூலம் மக்களின் சுகாதார பிரச்சனைகளின் வழி எதிர் நோக்கும் செலவீனங்களை குறைக்க உதவும் என்று நம்புகிறது. இத்திட்டத்தில் 250,000 குடும்பங்கள் குறிப்பாக பி40 எனப்படும் ரிம 3000 வரையில் வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அளிக்கப் படும் சேவை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Pengarang :