NATIONAL

ரிம9.5 மில்லியன் விவகாரம்: எஸ்பிஆர்எம் பொறுத்திருப்பது ஆச்சரியம்

OLEH ERMIZI MUHAMAD

ஷா ஆலம், ஜூன் 6:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்) பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட ரிம 9.5 மில்லியன் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கேள்வி குறியாக இருக்கிறது என்று கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவா கூறினார். இந்த விவகாரத்தில் நாட்டின் உயர்ந்த பொறுப்பில் உள்ள தலைவரின் நேர்மையில் சந்தேகம் எழுந்துள்ளது என்றும் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பொது மக்களிடையே பல கேள்விகள் எழுகின்றன என்றார்.

”   இது மிகவும் மோசமான ஊழல், ஆனால் ஏன் எஸ்பிஆர்எம் நடவடிக்கை எடுக்க தயங்குகிறது? அதேபோல் அட்டர்னி ஜெனரல் அலுவலகமும் செயல்படுகிறது. இந்த விவகாரம் நாட்டின் நம்பகத்தன்மை மற்றும் அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தின் கண்ணியம் கேள்விக் குறியாக இருக்கிறது. ஆக இதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்,” என்று கூறினார்.

இதற்கு முன்பு, ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டத்தோ ஸுல்கிப்லி அமாட் கூறுகையில், எந்த நடவடிக்கை எடுக்கும் முன்பு தனது கீழ் செயல்படும் ஆணையம் ‘பொறுத்திருந்து பார்ப்போம்’ என்ற நிலைப்பாட்டை கடைப்பிடிக்கும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

tian-chua

 

 

 

 

 

இதனிடையே, பல தரப்பினர் காவல்துறையில் பிரதமர் நஜிப் வங்கி கணக்கில் இருந்து வழக்கறிஞர் ஷாஃபி அப்துல்லாவின் வங்கி கணக்கில் மாற்றியதாக சரவாக் ரேப்போட் அறிக்கை வெளியிட்டதை   புகார் செய்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே 31 அன்று சரவாக் ரெப்போட் ரிம4.3 மில்லியன் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் தனது தனிப்பட்ட வங்கி கணக்கில் இருந்து ஷாஃபி அப்துல்லாவின் வங்கி கணக்கில் மாற்றியதாக குற்றம் சாட்டியது. இந்த பரிமாற்றம் ஹுசேன் அமாட் கொலை செய்யப்பட்ட காலகட்டத்தில் நடந்ததாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ரிம 5.2 மில்லியன் பணம் பிப்ரவரி 17 2014-இல் பரிமாற்றம் செய்யப் பட்டதாகவும், இந்நேரத்தில் அன்வார் இப்ராஹிம் அவதூறு வழக்கு நடைபெற்ற சமயம் என சரவாக் ரெப்போட் கூறுகிறது. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் அரசாங்கம் ஷாஃபி அப்துல்லாவை அன்வார் இப்ராஹிம் மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக நியமனம் செய்தது ஆகும்.


Pengarang :