NATIONAL

பெல்டா குலோபல் வென்ட்ச்ர் நெருக்கடியை தீர்க்க ஏன் முன்னாள் மந்திரியை நியமிக்க வேண்டும்?

ஷா ஆலம், ஜூன் 9:

பெல்டா குலோபல் வென்ட்ச்ர் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நெருக்கடியை தீர்க்க டத்தோ ஸ்ரீ இட்ரிஸ் ஜாலாவை நியமித்த நடவடிக்கையை அனைவரும் கேள்வி எழுப்புகிறார்கள் என்று பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கூறினார். முன்னாள் பிரதமர்துறை அமைச்சரான இட்ரிஸ் ஜாலாவை விட தகுதியான மற்றும் திறமைகள் கொண்ட நபர்கள் இருப்பதாக கூறினார்.

எந்த தரப்பினரையும் சார்ந்து இல்லாத நபர்களை கொண்டு சிறப்பு குழுவை அமைக்க வேண்டும். இந்த நடவடிக்கை குழு யாரையும் மூடி மறைக்காமல் உண்மையை வெளிக்கொணர  வேண்டும் என்று தெரிவித்தார்.

நேற்று மத்திய அரசாங்கம் இட்ரிஸ் ஜாலாவை நடுநிலையான நபராக நியமித்து பெல்டா குலோபல் வென்ட்ச்ர் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனத்தில் நடந்த தவறுகளை கண்டு பிடித்து சரியான முறையில் தீர்வு காண வழி வகுக்க வேண்டும் என்று முடிவு செய்தது.

MUHYIDDIN BERSATU

 

 

 

 

 

இந்த நடவடிக்கை பெல்டா குலோபல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டத்தோ ஸாக்காரியா அர்ஷாட் ஏற்றுக் கொள்ள முடியாத முதலீடுகள் தலைமை செயற்குழுவின் பரிந்துரையை மீறி செய்யப்பட்டதாக தகவல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஸாக்காரியாவை பெல்டா குலோபல் வாரிய இயக்குனர்கள் தற்காலிக சேவை நிறுத்தம் செய்தது மற்றும் இந்நிறுவனத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஈசா சாமாட் தனது நிலையை தற்காத்து பேசியது குறிப்பிடத்தக்கது.


Pengarang :