SELANGOR

எம்டிகெல் மறு சுழற்சி பொருட்களை பயன்படுத்தும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும் MDKL

ஷா ஆலம்,ஜூன் 8:

கோலா லங்காட் மாவட்ட மன்றம்  (எம்டிகேஎல்) உணவு தட்டுகளை மறு சுழற்சி செய்யும் நடைமுறை பின்பற்றி சுற்று சூழல் பாதுகாப்பு விடயத்தில் கவனம் செலுத்தி வரும் என்று மாவட்ட மன்றத் தலைவர் முகமட் ஜைன் ஹமீத் கூறினார்.

மாவட்ட மன்றம் மீண்டும் இந்த ஆண்டில் ரமலான் பஸாரில் மறு சுழற்சி பொருட்களை பயன்படுத்தும் நடவடிக்கையை தொடர்ந்து எடுத்து வருகிறது. மேலும் முகமட் ஜைன் கூறுகையில், மறு சுழற்சி உணவு தட்டுகள் இலவசமாக பொது மக்களுக்கு கொடுக்கப்பட்டது மட்டுமில்லாமல் துண்டுப் பிரச்சாரம கையேடுகளும் வழங்கப்பட்டன.

”   வியாபாரிகள் மற்றும் பயனீட்டாளர்கள் மறு சுழற்சி செய்யும் உணவு தட்டுகளை பயன்படுத்துவது மற்றும் இந்த நடவடிக்கை மூலம் சுற்று சூழல் பாதுகாக்கும் வகையில் இருக்கும். மேலும் இந்நடவடிக்கை பிளாஸ்டிக் பை பயன்பாடு வேண்டாம் எனும் மாநில அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் முயற்சி ஆகும்,” என்று கூறினார்.

 

zain mdkl

 

 

 

 

 

 

முகமட் ஜைன் மேலும் கூறுகையில், பஸார் ரமலான் வியாபாரிகள் குப்பைகளை அகற்றும் போது ஏற்படுத்தி இருக்கும் குப்பை தொட்டிகளில் வீசுமாறு கேட்டுக் கொண்டார். இது குப்பைகளை அகற்றும் பணிகள் சீராக நடக்க உதவும் என்றார். ஒவ்வொரு இரவு 8மணிக்கு குப்பைகளை அகற்றுவார்கள் என்று விவரித்தார்.


Pengarang :